ரணில் தரப்பினர் வகுக்கும் புதிய திட்டம்!!

813

ஜனாதிபதித் தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது பொருத்தமானது என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல்களுக்கு பயந்துள்ளதாக சிலர் சுமத்தும் குற்றச்சாட்டை நிராகரிக்கின்றோம். எந்த தேர்தலுக்கும் தயார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியும் என்பதால், இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் யோசனை ஒன்றை நிறைவேற்றுவோம்.

அதன் மூலமாக ஜனாதிபதித் தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது பொருத்தமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நிறுத்தப்பட்டதால், பட்டாசு வெடித்து கொண்டாடியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நளின் பண்டார, நீதித்துறை கட்டமைப்பு மற்றும் அரசியலமைப்பின் கௌரவம் பாதுகாக்கப்பட்டது தொடர்பில் மகிழ்ச்சியடைந்தே மக்கள் பட்டாசு கொளுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.