வவுனியாவில் கிராம சக்தியின் இரண்டாவது வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு!!

370


நாடாளாவிய ரீதியில் தற்போது வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்படும் கிராம சக்தி மக்கள் இயக்கம் தொடர்பான செயற்திட்டத்தின் பிரதான நிகழ்வு அநுராதபுர மாவட்டத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் அதேவேளை, வவுனியா மாவட்டத்திற்கான கிராம மக்கள் செயற்திட்டத்தின் கீழ் பிரதான அங்குரார்ப்பண நிகழ்வு வவுனியா பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நொச்சிமோட்டை கிராம சேவையாளர் பிரிவின் காரியாலயத்தில் நேற்று (20.12.2018) காலை 10.30 மணியளவில் மாவட்ட செயலாளர் H.M ஹனீபா தலைமையில் நடைபெற்றது.

இக் கிராம சேவையாளர் பிரிவில் சுயதொழில் ஊக்குவிப்பினை மேற்கொள்ளும் பொருட்டு பன்னீர், நெய் தயாரிப்பிற்கான ஆரம்ப விளக்கவுரையினை இக் கிராமத்தின் 35 பயனாளிகளுக்கு மிருக வைத்தியர் S.சுதாயினி முன்வைத்தார்.



இந் நிகழ்வில் மாவட்ட செயலாளர் H.M ஹனீபா, வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன், மாவட்ட செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.சபாலிங்கம், சமுர்த்தி உத்தியோகத்தர்களும், வவுனியா நகரசபை உறுப்பினருமாகிய லறீப், வவுனியா பிரதேச செயலகத்தின் கிராம சக்தி செயற்திட்டத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் இ.சிவராம்,

கிராம வேவையாளர் ந.குபேந்திரன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ந.அருள்மொழி, அப் பிரிவின் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர், மாதர் சங்கத்தின் தலைவர், கமக்கார அமைப்பின் தலைவர் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.



மேலும் மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இக் கிராம சக்திச் செயற்திட்டத்தின் நிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றன.



2025ம் ஆண்டளவில் இலங்கையை வறுமையிலிருந்து மீட்டெடுத்தலுக்காக ஜனாதிபதியினால் இச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.