வவுனியாவில் ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 14ம் ஆண்டு நினைவு நாள் பிராத்தனை!!

410


ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தின் 14ம் ஆண்டு நினைவு நாள் பிராத்தனை இன்று (26.12.2018) காலை 9.20 மணிக்கு பூந்தோட்டம் சுனாமி நினைவுத் தூபி முன்றலில் அருள் மிகு ஸ்ரீ லட்சுமி சமேத நரசிங்கர் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

மௌன பிராத்தனையுடன் ஆரம்பமான இப் பிராத்தனை நிகழ்வில் நினைவுச்சுடர் ஏற்றுதல், மலர் அஞ்சலி செலுத்துதல், பிராத்தனை என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன



இலங்கைத் தீவிலே முதன் முதலாக வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லட்சுமி சமேத நரசிங்கர் ஆலய பரிபாலன சபையினரால் சுனாமி பேரலையின் 31ம் நாள் நினைவாக 26.01.2005ம் ஆண்டு பூந்தோட்டம் சிறுவர் பூங்காவில் சுனாமிப்பேரலை அனர்த்த நினைவுத் தூபி நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் , முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான ஜீ.ரி.லிங்கநாதன், ப.சத்தியலிங்கம் , வவுனியா நகரசபை தலைவர், உபதலைவர் , செயலாளர் , உறுப்பினர்கள், கிராம சேவையாளர்கள், பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வி.பிரதீபன், குடும்ப நல உத்தியோகத்தர்கள், வர்த்தக சங்கத்தினர், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் , சுனாமியினால் உயிரிழந்த உறவினர்களின் உறவுகள், மதத்தலைவர்கள் , பொதுமக்கள் , சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டு சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தினார்கள்.



இதன் போது வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லட்சுமி சமேத நரசிங்கர் ஆலய பரிபாலன சபையினரால் சுனாமியினால் பாதிக்கப்பட்ட ஒர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது.
இன் நிதியினை அக்கிராமத்தின் கிராம சேவையாளர் பெற்றுக்கொண்டார்.