16 வயதில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட சிறுமி : 15 ஆண்டுகள் கழித்து அவரது நிலை!!

650


 

பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட சிறுமி



அமெரிக்காவில் 16 வயதில் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட சிறுமி, ஒருவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நிலையில் தற்போது தனது 30-ஆவது வயதில் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.





சிண்டோயா பிரவுன் (30) என்ற பெண் கடந்த 2004-ல் தனது 16வயது வயதில் தன்னை தத்தெடுத்த குடும்பத்தினருடன் வசித்து வந்தார். பிரவுனின் தாய் குடிக்கு அடிமையானவராக இருந்த நிலையில் அந்த குடும்பத்தில் இருந்து தப்பித்த பிரவுன், நபர் ஒருவருடன் ஹொட்டலில் தங்கியிருந்தார்.


அந்த நபர் பிரவுனை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார். இந்நிலையில் ஆலென் (41) என்ற நபர் $150 பணத்தை கொடுத்து பிரவுனை உறவுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு நடந்த பிரச்சனையில் பிரவுன், ஆலனை துப்பாக்கியால் சுட்டு கொன்றார்.


பின்னர் ஆலெனிடம் இருந்த இரண்டு துப்பாக்கிகள் மற்றும் பணத்தை தூக்கி கொண்டு பிரவுன் ஓடினார். ஆனால் இதன் பின்னர் பொலிசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றம் பிரவுனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதாவது 51 ஆண்டுகள் அவர் சிறையில் இருந்து பரோலில் கூட வெளிவரமுடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால் அமெரிக்காவை சேர்ந்த பிரபலங்கள் உட்பட பலர் பிரவுனுக்கு ஆதரவாக பேசியதோடு, அவரை விடுவிக்க கோரினார்.


இந்நிலையில் கவர்னர் ஹசலாமின் ஒப்புதலோடு சிறுமியாக சிறைக்கு சென்ற பிரவுன் தற்போது 30-ஆவது வயதில் சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்படுகிறார். கருணை அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது, வரும் ஆகஸ்ட் 7ஆம் திகதி பிரவுன் சிறையில் இருந்து வெளியில் வருகிறார். இதிலிருந்து பத்து ஆண்டுகள் அவர் எந்த தவறான சம்பவங்களில் ஈடுபடுகிறாரா என கண்காணிக்கபடுவார் என்று கூறப்பட்டுள்ளது.