உலகிலேயே அதிக காளைகள் பங்கேற்பு : கின்னஸ் சாதனை படைத்த ஜல்லிக்கட்டு!!

331

 

சாதனை படைத்த ஜல்லிக்கட்டு

தமிழகத்தின் விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 1,353 காளைகள் பங்கேற்று கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி உலகிலேயே மிகப்பெரியது என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் 1,353 காளைகள் இங்கு அவிழ்த்துவிடப்பட்டன. இதன்மூலம் இந்தப் போட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அதாவது உலகிலேயே அதிக காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு இதுதான்.

இதற்கு முன்பு பாலமேடு ஜல்லிக்கட்டில் 988 காளைகள் திறந்துவிடப்பட்டதே சாதனையாக இருந்தது. இந்தப் போட்டியை காண சிங்கப்பூர், மலேசியா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 250க்கும் மேற்பட்டவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக வந்தனர். முன்னதாக, விராலிமலை ஜல்லிக்கட்டில் 2000 காளைகள் களமிறக்க முடிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.