கட்டுப்பாடற்ற உணவுப் பழக்கம்.. 10 ஆண்டுகளில் ஆளே மாறிப்போன பரிதாபம்!!

447

 

கட்டுப்பாடற்ற உணவுப் பழக்கம்

இந்தோனேசியாவின் அதிக உடல் எடை கொண்ட பெண்மணியை சிகிச்சைக்காக அவரது குடியிருப்பில் இருந்து வெளியே கொண்டுவர அரசின் உதவியை நாடியுள்ளார். இந்தோனேசியாவின் Palangka Raya பகுதியில் குடியிருந்து வருபவர் 37 வயதான டிட்டி வாதி. இவரது உடல் எடை தற்போது 356 கிலோ என்பதால் இவரால் நகர முடியாமல் ஒரே இடத்தில் படுத்த படுக்கையாகியுள்ளார்.

ஒரு குழந்தைக்கு தாயாரான டிட்டி வாதி தமது மகளின் கவனிப்பிலேயே காலத்தை ஓட்டுகிறார். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் தாம் இவ்வாறு இல்லை எனவும், கட்டுப்பாடற்ற உணவுப் பழக்கமே தம்மை சீரழித்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி கடந்த 6 ஆண்டுகளாக குப்புற படுத்தவாறே உள்ளதாகவும், தமது 19 வயது மகளே தற்போது தமக்கு எல்லாம் எனவும் தெரிவித்துள்ளார். தற்போது 356 கிலோ என்பதால் தம்மால் உட்காரவோ நிற்கவோ முடியாத சூழல் என்கிறார் வாதி.

தமது இந்த நிலை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும், சிகிச்சைக்கு தாம் ஒப்புக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் பல முறை உடல் எடையை குறைக்க முயன்றதாகவும், ஆனால் தோல்வியே மிஞ்சியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நிலை காரணமாக தமது சிகிச்சையை முன்னெடுக்க முடியாமல் தடுமாறி வந்ததாகவும், ஆனால் தற்போது தமது மகளின் முயற்சியால் மாகாண அதிகாரிகள் உதவ முன்வந்துள்ளதாகவும், அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிதியுதவி அளித்தால் உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.