பின் பக்கம் இருக்கும் சதையை எப்படி குறைப்பது? இதோ எளிய பயிற்சி!!

945


 

பின் பக்கம் இருக்கும் சதையை எப்படி குறைப்பது?



பொதுவாக சில பெண்களுக்கு பின் பக்கம் சதை அதிகரித்து காணப்படும். இதற்கு முக்கிய காரணம் ஓரே இடத்தில் மணிக்கணக்கில் அமருவதே ஆகும். இதனால் பின்பக்கம் சதை அதரித்து உடற்தோற்றத்தையே மாற்றிவிடுகின்றது. இந்த பகுதியை குறைப்பதற்காவே பல வழிகள் உள்ளன. அதை தினந்தோறும் செய்யும் போது நிச்சயம் குறையும். இதற்கு ஜிம்மிற்கு சென்று தான் குறைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கீழ் இடுப்பை குறைக்கும் உடற்பயிற்சிகளை நாம் தினமும் செய்ய வேண்டியது அவசியம்.





இதை செய்வதால் தசைகள் வலுவடைந்து நம்மை நல்ல வடிவத்திற்கும் கொண்டு வருகின்றன. அதிகமாக உள்ள சதைகளையும் கொழுப்புகளை குறைக்கவும், கரைக்கவும் இந்த செயல் வல்லதாய் உள்ளது. தற்போது பின்பக்க சதைகளை குறைக்கும் சில எளிய பயிற்சிகளை பார்ப்போம்.


ஸ்டெப்-அப்ஸ் (Step-ups) : படியில் ஏறி இறங்குவது தான் இந்த வகை பயிற்சியாகும். படியை நாம் முதலில் தேர்ந்தெடுத்து மற்றும் ஏறி ஏறி இறங்கும் போது அங்குள்ள தசைகள் குறைய துவங்குகின்றது.


ஸ்குவார்ட்ஸ் (Squats) : பின்பகுதியை குறைப்பதில் ஸ்டெப்-அப்பிற்கு அடுத்து வரும் மிகச்சிறந்த பயிற்சி செயல்பாடு ஸ்குவாட் செய்யும் வேலையாகும். இதனால் உடம்பில் உள்ள ஒவ்வொரு தசையின் பகுதியையும் வேலை செய்ய வைக்கிறோம். இது ஒரு சிறந்த அழகை உங்களுக்கு கொண்டு வரும். இப்படிப்பட்ட அழகை தினசரி இரண்டு அல்லது மூன்று முறையாவது பயிற்சி செய்து தான் பெற முடியும்.

ஓடுதல் (Running) : ஓடுவது கீழ் இடுப்பிற்கு ஒரு நல்ல பயிற்சியாகும் அது மட்டுமில்லாமல் மிக சிறந்த வகையில் உடலை டோனிங் செய்யவும் முடிகின்றது. மற்ற பயிற்சிகளை காட்டிலும் ஓடும் போது நிறைய கலோரிகள் குறைக்கப்படுகின்றன. இது கீழ் இடுப்பு மட்டுமில்லாமல் தொடைகளையும் குறைக்க உதவுகிறது. ஸ்டேடியம் அல்லது பார்க் ஆகிய இடங்களுக்கு சென்று ஓடும் பயிற்சியை செய்து வரலாம். அல்லது வீட்டில் டிரெட் மில் வாங்கி பயன்படுத்தலாம். அரை மணி நேர பயிற்சி ‘பின்னால்’ பெரும் மாற்றங்களை கொண்டு வரும்.


லாஞ்சஸ் (Lunges) : இந்த பயிற்சியும் மிக சிறந்த பயிற்சி முறையாகும். இதை கால்களை விரித்து நடப்பதை போல் வைத்து எவ்வளவு விரித்து வைக்க முடியுமோ அவ்வளவு தூரம் விரித்து பின்னர் உட்காருவதை போல் ஒரு நிலைக்கு வர வேண்டும். இதை திரும்பத் திரும்ப ஒவ்வொரு காலுக்கும் செய்ய வேண்டும். இந்த பயிற்சியை செய்யும் போது பின் பகுதி குறைய நீங்கள் எடுக்கும் முயற்சி பலன் தருவதை நீங்களே உணருவீர்கள்.

இதை திரும்பத் திரும்ப பல செட்டுகளாக செய்தால் உங்களுக்கு வித்தியாசம் தெரிய வரும். எந்த ஒரு பயிற்சியாக இருந்தாலும் உடனடியாக பெரும் மாற்றங்களை பார்க்க முடியாது. சிறிது காலமாவது பொறுமையுடன் இதை செய்து இடைவிடாத முயற்சி செய்து தான் நாம் நினைக்கும் அழகை நமக்கு கொண்டு வர முடியும்.

பட் ஸ்குவீசஸ் (Butt squeezes) : இதுவும் ஒரு சிறந்த பயிற்சி தான். பட் ஸ்குவீசர் பந்தை எடுத்து தினமும் அதில் பயிற்சி செய்வது அங்குள்ள கலோரிகளை குறைக்க உதவும். இது உடம்பின் கீழ் பகுதியை பயிற்சி செய்ய வைத்து குறைக்கும். தினமும் சிறிது நேரம் இப்பயிற்சியை மேற்கொண்டு வந்தால் மிகுந்த பலனை தரும். அது மட்டுமில்லாமல் சில நாட்களில் நீங்கள் நினைத்த அழகையும் பெற முடியும்.