உலகை திரும்பிப் பார்க்கவைத்த திருநங்கை : படித்துப்பாருங்கள் அசந்து போவீர்கள்!!

749

 

நர்த்தகி நடராஜு

10 வயதில் உடலில் ஏற்பட்ட மாற்றத்தையடுத்து பின்னாளில் திருநங்கையாக மாறிய தமிழச்சி நர்த்தகி நடராஜுக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்து கெளரவித்துள்ளது. இன்று உலகளவில் புகழ்பெற்றுள்ள நர்த்தகி நடராஜ் வாழ்க்கையில் பெரும் துன்பத்தை அனுபவித்தவர் ஆவார். அவர் ஒருமுறை அளித்த பேட்டியில், சிறுவயதிலேயே எனக்குள் ஒரு பெண்மை இருந்தது.

ஆனால் என்னை எல்லாருமே கிண்டல் பண்ணாங்க. அப்போ எனக்கு பத்மினி, வைஜெயந்திமாலா நடனம்னா ரொம்ப பிடிக்கும். 11-ம் வகுப்பு வரைதான் வீட்டில படிக்க வெச்சாங்க. அதுக்கு மேல ஸ்கூலுக்கு அனுப்ப அசிங்கமா நினைச்சாங்க. அதனால தான் வீட்டை விட்டே ஓடிப்போற நிலைமை எனக்கு வந்துடுச்சு என்று மனம் திறந்து சொல்லும்போது தான் நடராஜ் பட்ட அவமானங்களின் வலிகளை உணர முடிகிறது.

எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த நடராஜூக்கு மனசு அலை பாய்ந்தது பரதத்தின் மீதுதான். அதனால்தான் இந்த மதுரைவாசி தஞ்சாவூருக்கு சென்று முறைப்படி பரதம் கற்று பின் கச்சேரிகளை செய்ய ஆரம்பித்து, உலகம் முழுக்க பயணிக்க ஆரம்பித்தார்.

வெளிநாடுகளில் நடராஜ் நடனத்திற்கு மவுசு அதிகம். அதனால்தான் ஆயிரக்கணக்கான மேடைகளில் நடன நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார். வெளிநாடுகளில் தமிழ் அமைப்புகள் மட்டுமல்லாமல், முழுக்க முழுக்க வெளிநாட்டவர்களால் நிர்வாகிக்கப்படும் கலை கலாச்சார அமைப்புகளின் பேரில் பரதநாட்டிய நிகழ்ச்சிகளை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

இவ்வளவு சாதனைகளை செய்துள்ள நார்த்தகி நடராஜனுக்கு ஏற்கனவே தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் தந்து கவுரவித்தது. இன்றைக்கு பத்மஸ்ரீ விருது பெறும் அளவுக்கு தன்னை அவர் நிரூபித்துள்ளார். தமிழக அரசின் 11-ம் வகுப்பிற்கான தமிழ்ப் பாட புத்தகத்தில் நர்த்தகி நடராஜின் வாழ்க்கை பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.