வவுனியா தமிழ் மகாவித்தியாலய வரலாற்றில் முதல்முறையாக இடம்பெறவிருக்கும் நிகழ்வு!!

609


மகாவித்தியன்கள் தினம்



வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கமானது இப் பாடசாலையில் கல்விகற்று வெளியேறிய அனைத்து பழைய மாணவர்களையும் மீண்டும் பாடசாலையில் அணிதிரட்டும் நோக்குடனான ஒன்றுகூடல் நிகழ்வொன்றினை ‘மகாவித்தியன்கள் தினம்’ எனும் பெயரில் 03.02.2019 அன்று பாடசாலையில் ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பில் குறித்த பாடசாலையின் பழையமாணவர் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்..



வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கமானது இப் பாடசாலையில் கல்விகற்று வெளியேறிய அனைத்து பழைய மாணவர்களையும் மீண்டும் பாடசாலையில் அணிதிரட்டும் நோக்குடனான ஒன்றுகூடல் நிகழ்வொன்றினை ‘மகாவித்தியன்கள் தினம்’ எனும் பெயரில் 2019.02.03 ஆந் திகதி பாடசாலையில் ஏற்பாடு செய்துள்ளது.




இந் நிகழ்வானது 2019.02.03 ம் திகதி காலை 8 மணிக்கு பாடசாலையிலிருந்து ஆரம்பிக்கும் நடைபவனியுடன் ஆரம்பித்து நடைபவனியானது மீண்டும் பாடசாலையை வந்தடைந்தவுடன் பழைய மாணவர் அணிகளுக்கிடையேயான மென்பந்து கிரிக்கெட் போட்டிகள் உட்பட்ட சிநேகிதபூர்வ விளையாட்டு போட்டி நிகழ்வுகளும், பிள்ளைகளுக்கான விநோத விளையாட்டு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வுகள் அன்றையதினம் மாலை வரை பாடசாலையில் இடம்பெறும்.


இப் பாடசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக அனைத்து பழையமாணவர்களையும் ஒன்றுசேர்ந்து பாடசாலையின் வளர்ச்சிக்கு உரமூட்டும் இந்த இனிய ஆரம்ப நிகழ்வில் அனைத்து பழையமாணவர்களையும் தங்கள் குடும்பத்துடன் கலந்து சிறப்பிக்குமாறு தோழமையுடன் கேட்டுநிற்கின்றோம்.’

நிர்வாக சபை
பழைய மாணவர் சங்கம்
வ/வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்