பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் மன்னாரில் அறிமுகம்!!

477


 

மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற ஊடகவியலாளர் திரு.பி.மாணிக்கவாசகம் அவர்களின் “கால அதிர்வுகள்” நூல் அறிமுக விழா மன்னார் நகர மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.



வரவேற்புரையினை அருட்பணி தமிழ்நேசன் அடிகளாரும் வரவேற்பு நடனத்தினை பரதகலாலய நாட்டியப்பள்ளி மாணவிகளும் ஆசியுரையினை மும்மதத் தலைவர்களும் வழங்க தலைமையுரையினை திரு நிக்சன் குரூஸ் அவர்களும் நூல் அறிமுகவுரையினை எழுத்தாளர் வெற்றிச்செல்வி சந்திரகலா அவர்களும் வழங்கியிருந்தனர்.

அருட்பணி தமிழ்நேசன் அடிகளார் ஊடகவியலாளர் திரு.பி.மாணிக்கவாசகம் அவர்களின் “கால அதிர்வுகள்” நூலை வெளியிட அவர்களிடம் இருந்து முதல் பிரதியினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் பெற்றுக்கொண்டார்



அதனைத்தொடர்ந்து அரச அதிகாரிகள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் அனைவரும் பெற்றுக்கொண்டனர்.



நூல் மதிப்பீட்டுரையினை எழுத்தாளர் துறையூரான் சிவானந்தன் சிறப்பாக வழங்கினர்.


40 ஆண்கள் கடந்தும் ஊடகத்துறையில் நிலைத்து நின்று மக்களின் பிரச்சினைகளை நடுநிலையாக வழங்கி வரும் ஊடகவியலாளர் திரு.பி.மாணிக்கவாசகம் அவர்களின் “கால அதிர்வுகள்” நூல் போர்கால வரலாற்றினையும் தமிழர்களின் வாழ்வியலையும் மையமாக கொண்டு தனது கட்டுரையாக்கத்தினை வெளியிட்டு இருப்பது கடந்து வந்த மறக்கமுடியாத வாழ்வின் சம்பவங்களின் ஒரு ஆவணத்தொகுப்பாகும்.

நன்றியுரையினை மாக்ஸ் மில்லன் குரூஸ் வழங்க நிகழ்ச்சி தொகுப்பினை கவிஞர் மயூரன் வழங்கினார் ஊடகவியலாளர் திரு.பி.மாணிக்கவாசகம் அவர்களின் ” கால அதிர்வுகள்” நூல் அறிமுக விழா இனிதே நிறைவுபெற்றது.