வவுனியாவில் சமையல் அறையில் வெடித்த காஸ் சிலிண்டர் : பாடசாலை மாணவி வைத்தியசாலையில்!!

549

பாடசாலை மாணவி வைத்தியசாலையில்

வவுனியா மடுக்கந்தை மயிலங்குளம் பகுதியில் நேற்று (16.02.2019) மதியம் 2 மணியளவில் வீட்டின் சமயலறையில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்ததில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் குறித்த பாடசாலை மாணவி சமைப்பதற்காக சமயறைக்கு சென்று காஸ் அடுப்பினை பற்றவைத்த சமயத்தில் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. உடனடியாக அயலவர்களின் உதவியுடன் மாணவி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த பாடசாலை மாணவி அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாணவியின் நிலமை கவலைக்கிடமாக காணப்படுவதினால் மேலதிக விபரங்கள் எவையும் தற்சமயம் தெரிவிக்க முடியாது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.