வவுனியாவில் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட மாணவி ஹரிஸ்ணவி : நீதிக்காக காத்திருக்கும் தந்தை!!

559


ஹரிஸ்ணவியின் படுகொலை சம்பவமானது மக்கள் மனங்களிலிருந்து மெல்ல மெல்ல மறைந்து செல்கிறது. நீதியை பெற்றுத்தர ஊடகங்களாலே முடியும் என ஹரிஸ்ணவியின் தந்தையின் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.



கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி எனது மகள் பாடசாலை மாணவியான ஹரிஸ்ணவி 14 வயதில் வீட்டில் தனியாக இருந்தபோது ஈனஇரக்கமற்ற பாவி ஒருவனால் பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்று நேற்று முன்தினத்துடன் (16.02) மூன்று வருடங்கள் கடந்துவிட்டன.

மூன்று வருடங்கள் கடந்தவிட்ட நிலையிலும் இன்றுவரையில் எனது மகளுக்கு நீதியைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கு நீதியைப் பெற்றுத்தர ஊடகங்கள் முன்வரவேண்டும் என தனது கவலையை கண்ணீருடன் இவ்வாறு தெரியப்படுத்தியுள்ளார்.



இவ்விடயத்தில் இன்றுவரை நீதியைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கு ஒரு நீதியைப் பெற்றுத்தர ஊடகங்களாலேயே முடியும் எனவே வித்தியாவின் பாலியல் படுகொலையுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளுக்கு ஊடகங்களின் உதவியுடன் தண்டனை வழங்கப்பட்டுவிட்ட நிலையில் எனது மகளின் பாலியல் படுகொலையுடன் தொடர்புபட்ட நபருக்கு இன்னும் தண்டனை பெற்றுக்கொடுப்படவில்லை நீதியையும் நிலைநாட்டப்படவில்லை என்று கவலையுடன் தெரிவித்த ஹரிஸ்ணவியின் தந்தை. இச்சம்பவமானது மக்களின் மனதிலிருந்து மெல்ல மெல்ல மறைந்து சென்று கொண்டிருக்கின்றது.



இவ்வாறான ஒரு சம்பவம் இனிமேல் எந்த தாய்க்கோ, தந்தைக்கோ இவ்வாறு எமது நாட்டில் ஏற்பட்டுவிடக்கூடாது வழங்கப்படும் தண்டனை ஒரு பாடமாக அமையவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


இப் பாலியல் படுகொலையுடன் தொடர்புபட்டுள்ளதாக ஹரிஸ்ணவியின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவ்வழக்கானது வவுனியா நீதவான் நீதின்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. இவ்வழக்கு சார்பாக பெண்கள் அமைப்பினரின் சட்டத்தரணி ஒருவரினால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.


கடந்த வருடம் (26.11) வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதும் எந்தவித முன்னேற்றமுமின்றி அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் சித்திரை மாதம் 30ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளதாகவும் ஹரிஷணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.