கோடிக்கணக்கில் மோசடி : இலங்கை, பிரித்தானியாவில் தாய், மகளின் சொகுசு வாழ்க்கை : அதிர வைக்கும் பின்னணி!!

728

தாய், மகளின் சொகுசு வாழ்க்கை

ஒரே வீட்டை 5 பேரிடம் விற்று மோசடியாக கோடிக்கணக்கில் சம்பாதித்து இலங்கை, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த தாய் மற்றும் மகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் புதுடெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியைச் சேர்ந்தவர் மோலி கபூர் (65), இவர் தனது மகளான அனுராதா கபூருடன் (43) தங்களுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தனர்.

இவர்கள் தங்களது வீட்டினை 2.8 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதாகக் கூறி 2014-15 காலகட்டத்தில் 5 பேரிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு ஆளுக்கு 60 லட்ச ரூபாய், ஒரு கோடி ரூபாய் என மொத்தமாக 2.5 கோடி ரூபாயை முன்பணமாக பெற்றுக்கொண்டு, செல்ஃபோன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு தப்பிச்சென்றனர்.

இவர்கள் மீதான புகார்கள் இருவேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், ஹொட்டல் ஒன்றில் இவர்கள் தங்கியிருந்ததை அறிந்து அங்கு சென்ற பொலிசார் இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏமாற்றிய பணத்தை கொண்டு பிரித்தானியா, இலங்கை, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்று சொகுசான வாழ்க்கை வாழ்ந்ததாக கூறி அதிர வைத்தனர்.

மேலும் அனுராதா லண்டன் பல்கலைக்கழகத்தில் MBA பட்டம் பெற்றவர் என்பதும், படித்துவிட்டு நாடு திரும்பியவர் எனவும் தெரிந்தது.

இங்கு, பங்கு ஆலோசகராக பணியாற்றி வந்த நிலையில் உடனடியாக அதிக பணம் சம்பாதிக்கும் பொருட்டு தனது தாயிடம் இந்த மோசடி யோசனை குறித்து எடுத்துக்கூறி அவரை தனக்கு சாதகமாக மாற்றி மோசடிக்கு துணை புரியவைத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.