சரித்திரம் படைத்த இலங்கை அணி : ஜனாதிபதி வாழ்த்து!!

1


சரித்திரம் படைத்த இலங்கை அணி


தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2:0 என்ற கணக்கில் வெற்றியீட்டி, தென்னாபிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்ற ஒரேயொரு ஆசிய அணி என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.இந் நிலையில் இந்த வெற்றிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டுவிட்டர் மற்றும் முகநூல் வாயிலாக தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


அவர் அதில் தெரிவித்திருப்பதாவது, தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அவர்களது மண்ணில் வெற்றி பெற்ற முதல் ஆசிய என்ற பெருமையை இலங்கை அணி பெற்றுள்ளது.


அத்துடன் எங்கள் அணி வீரர்களின் சக்தியானது ஆச்சரியமாகவுள்ளதாகவும் குசல் பெரேராவின் துடுப்பாட்ட முறையானது சிறப்பாக அமைந்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் புதிய உத்வேகத்துடன் முன்னோக்கி பயணித்து தாய் நாட்டுக்காக இதுபோன்ற இன்னும் பல வெற்றிகளை பெறுவதற்கு சக்தியும், தைரியமும் கிடைக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி ஆசீர்வதித்துள்ளார்.