ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தனது முதல் சர்வதேச கிரிக்கெட் தொடரிலேயே சாதித்த இலங்கை வீரர்!!

1


சாதித்த இலங்கை வீரர்


இலங்கை – தென்னாபிரிக்க தொடரில் சிறப்பாக விளையாடிய இலங்கை வீரர் ஓஷத பெர்ணாண்டோ குறித்து தெரியவந்துள்ளது. இலங்கை – தென்னாப்பிரிக்க அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை இலங்கை அணி முழுவதுமாக 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது.இலங்கை அணி சார்பாக இத்தொடரில் களமிறங்கிய புதுமுக வீரராக ஓஷத பெர்ணாண்டோ சிறப்பாக விளையாடினார். குறிப்பாக இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்கள் குவித்தார்.


பெர்ணாண்டோ மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவராவார். ஒரு சமயம் தன்னுடைய சொந்த ஊரான கடுவெலவில் இருந்து கொழும்புவில் உள்ள இலங்கை கிரிக்கெட் சபைக்கு வந்து தன்னுடைய கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டிய சூழல் பெர்ணாண்டோவுக்கு ஏற்பட்டது.


ஆனால் அதற்கு கூட வாகனத்தில் வர அவரிடம் பணம் இல்லாமல் இருந்தது. அப்படி கஷ்டப்பட்டவர் இன்று தனது விடாமுயற்சியால் முதல்தர போட்டிகளில் சிறப்பாக ரன்கள் குவித்து அதன் மூலம் சர்வதேச அணியில் இடம்பிடித்தார். தற்போது முதல் தொடரிலேயே அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.