பிணத்தை எரித்து வாழைப்பத்தில் தொட்டு சாப்பிடும் மக்கள் : உலகில் இப்படியும் ஒரு நிகழ்வு!!

520

உலகில் இப்படியும் ஒரு நிகழ்வு

இந்த உலகில் சில இனத்தினர் பராம்பரியம் என்ற பெயரில் சில மூடப்பழக்க வழக்கங்களை தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர் . உலக மக்களின் பார்வைக்கு அது மூடத்தனமாக இருந்தாலும், அவர்களை பொறுத்தவரை அது நம்பிக்கை, தங்கள் வாழ்க்கையோடு ஒன்றிணைந்த ஒரு மரபாக பார்ப்பதால் அது மூடத்தனமாக தெரிவதில்லை.

அமேசானிய யானோமமி பழங்குடியினர் தங்கள் இனத்தினர் இறந்துவிட்டால் பிணத்தை எரித்து அதனை வாழைப்பழத்தில் தொட்டு சாப்பிடும் பழக்கத்தை காலம் காலமாக பின்பற்ற வருகிறார்.

இதனை ‘எண்ட்கானிபலிசம்’ என்று அழைக்கிறார்கள். அதாவது, இந்த இனத்தை சேர்ந்தவர்கள் இறந்துவிட்டால் அவர்களின் சாம்பலை சாப்பிடுகிறார்கள்.

மேலும், இறந்துபோனவர்களின் பிணத்தை எரித்து சாம்பலை வாழைப்பழத்தில் கலந்து சாப்பிடுவது இவர்களது மரபு. இதன் மூலம் அவர்களின் ஆத்மா எங்கும் செல்லாமல் தங்களுக்குள்ளே இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். காலம் காலமாக இந்த மரபினை பின்பற்றி வருகிறார்கள்.