வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி!!

613

கோவில்குளம் இந்துக் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி

வவுனியா இந்துக் கல்லூரியின் 2019 ஆண்டு வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நேற்று கல்லூரியின் அதிபர் ரி.பூலோகசிங்கம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.

நிகழ்வில் நாட்டின் தேசியக் கொடியை வவுனியா கல்வியல் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.சுவர்ணராஜா ஏற்றி வைத்ததை தொடர்ந்து கோட்ட கொடியை வவுனியா கோட்டக்கல்வி அதிகாரி எம்.மரியநாயகம், பாடசாலைக் கொடியை அதிபரும் ஏற்றிவைத்ததை தொடர்ந்து, இல்லங்களின் கொடிகளை அதற்கு பொறுப்பான ஆசிரியர்கள் ஏற்றி வைத்தனர்.

கொடியேற்றலைத் தொடர்ந்து விளையாட்டு நிகழ்வை ஜி.ரி. லிங்கநாதன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன் மாணவர்களின் அணிநடை நிகழ்வை அதிதிகள் ஏற்றுக்கொண்டனர். ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டு மாணவர்கள் சத்தியப் பிரமாணம் செய்தததை தொடர்ந்து ஆரம்பப் பிரிவு மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சியும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.

பாண்டியன் இல்லம் முதலாம் இடத்தையும், சேரன் இல்லம் இரண்டாம் இடத்தையும், சோழன் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன. விளையாட்டு நிகழ்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம், வர்த்தகர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், பெற்றோர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.