உலகிலேயே அதிக கவனம் ஈர்த்த பிரித்தானிய குடும்பம் : கின்னஸ் சாதனை படைக்கவிருக்கும் அதிசயம்!!

407


கின்னஸ் சாதனை படைக்கவிருக்கும் குடும்பம்



பிரித்தானியாவில் உள்ள தம்பதியினருக்கு இருவேறு நிறத்திலான இரட்டை குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்துள்ள அதிசய சம்பவம் நடந்துள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த டீன் டுரன்ட் மற்றும் அலிசன் ஸ்பூனர் (37) தம்பதியினருக்கு முதல் பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருக்கிறது. இதனை பார்த்ததும் அங்கிருந்த மருத்துவர்கள் அனைவருமே ஆச்சர்யமடைந்துள்ளனர்.



அதில் லாரன் என்கிற குழந்தை அவரது தாய் அலிசன் போல வெள்ளை நிறத்தில், ஊதா கலர் கொண்ட கண்களுடன் பிறந்துள்ளார். அதேபோல ஹேலே என்கிற மற்றொரு குழந்தை அவருடைய தந்தை டீன் போல பிறந்துள்ளது.




அடுத்த சில வருடங்களில் இந்த தம்பதியினருக்கு மீண்டும் மியா மற்றும் லியா என்கிற இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இவர்களும் அப்படியே தங்களுடைய அக்காக்களை போல இருவேறு நிறங்களில் பிறந்துள்ளனர்.


உலகிலேயே இதுபோன்ற அதிசயம் நடப்பது மிகவும் அரிதான ஒன்று என மருத்துவர்கள் கூறி வருகின்றனர். இத்தகைய அதிசயத்தின் காரணமாக குடும்பத்தினர் விரைவில் கின்னஸ் சாதனை படைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தம்பதியினரின் மூத்த இரட்டை குழந்தைகள் இருவரும் சமீபத்தில் தங்களுடைய 18 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள சகோதரிகள், எங்கள் இருவரை யார் பார்த்தாலும் இரட்டை சகோதரிகள் என்பதை நம்ப மாட்டார்கள். நண்பர்கள் என கூறுவார்கள்.


பொதுமக்கள் எங்களை ஆச்சர்யமாக பார்ப்பது எங்களுக்கு மிகவும் பிடிக்கும். நாங்கள் பள்ளி சேர்ந்த ஆரம்பத்தில் பெரும்பாலான மாணவர்கள் எங்களை கேலி செய்வார்கள். ஒருவரை வெள்ளை பிஸ்கட் என்றும், மற்றொருவரை சாக்லேட் பிஸ்கட் என்றும் கூறுவார்கள்.

ஆனால் நாங்கள் அதை ஒருபோதும் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை. பள்ளி ஆய்வகத்தில் எங்கள் இவருடைய புகைப்படமும் இருக்கிறது. இதனை பார்க்கும் மாணவர்கள் ஆச்சர்யமடைவார்கள். வெளியில் பார்க்கும் பலரும் எங்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இருவரின் தாய் அலிசன் கூறுகையில், என்னுடைய அதிசய குழந்தைகளுக்கு 18 வயதாகிவிட்டது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவர்கள் சிறந்த நண்பர்களாக இருக்கிறார்கள். வித்தியாசமாகத் தோன்றுவதை தவிர்த்து, எல்லா வழிகளிலும் ஒன்றாக இருக்கிறார்கள்.

பொதுமக்கள் யாருமே அவர்கள் இரட்டையர்கள் என்பதை நம்ப மறுக்கிறார்கள். மருத்துவர் கூட ஒருமுறை குழம்பிவிட்டார் என தெரிவித்துள்ளார்.