152 கிலோ இருந்த இளைஞன் : ஒரே வருடத்தில் 69 கிலோ எடை குறைத்தது எப்படி?

351

152 கிலோ இளைஞன்..

பிரித்தானியாவைச் சேர்ந்த இளைஞர் ஒரு வருடத்தில் 152 கிலோ எடையிலிருந்து 69 கிலோ எடையை குறைத்தது எப்படி என்ற ரகசியத்தை கூறியுள்ளார். பிரித்தானியாவின் Suffolk நகரத்தின் Haverhill பகுதியைச் சேர்ந்தவர் Luke. 32 வயதான இவர் 152 கிலோ எடையிலிருந்து 11 ஸ்டோன் அதாவது 69 கிலோ எடையை குறைத்துள்ளார்.

இது குறித்து அவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், எனக்கு உணவுகளின் மீது அதிக ஆசை இருக்கும். இதன் காரணமாகவே சீனா வகை உணவுகள், இந்திய வகை உணவுகள் போன்றவைகளை அதிகம் விரும்பி சாப்பிடுவேன். அதுமட்டுமின்றி ஒவ்வொரு வார இறுதியிலும் அதிக அளவில் டிரின்க்ஸ் குடிப்பேன். இதைத் தவிர மீன்கள், சிப்ஸ் வகைகள் மற்றும் மிகப் பெரிய பீட்சா வகைகளை அதிகம் சாப்பிடுவேன்.

இதன் காரணமாகவே என் உடல் எடை அதிகரித்துக் கொண்டே சென்றது. மூச்சு விடுவதில் சிறு பிரச்சனை ஏற்பட்டது. என்னுடைய நம்பிக்கைகள் எல்லாம் உடைந்துவிட்டன. பல முறை வீட்டில் தனியாக இருக்கும் போது இதைப் பற்றி யோசித்ததுண்டு.

வெளியில் செல்லும் போது ஒரு வித தயக்கம் இருக்கும், இதனால் இதற்கு முடிவு கட்ட Slimming World என்ற குரூப்பில் சேர்ந்தேன். ஏனெனில் என்னுடைய சகதோரன் இதில் சேர்ந்து தான் 38 கிலோ எடை குறைத்தான். என்னுடைய தந்தையும் எடை குறைப்பதற்கு உதவி செய்தார். உடல் எடை அதிகரிப்பால் நீரிழிவு நோய் பிரச்சனையும் இருந்தது.

அந்த குரூப்பில் சேர்ந்த பின்பு என்னுடைய உணவு பழக்க வழக்கத்தில் மாற்றம் வந்தது. பிரஷ்ஷான காய்களை சாப்பிட்டேன். சொந்தமாக தனக்கு தேவையான ஆரோக்கியமானதை சமைத்து சாப்பிட்டேன். ஜிம்மில் சேர்ந்தேன். இந்த குரூப்பில் சேர்ந்த போது முதலில் 5 கி.மீற்றர் ஓட வேண்டும் என்றால் 35 நிமிடம் எடுத்துக் கொண்டேன். ஆனால் அதுவே ஒரு ஆண்டிற்கு பின் இப்போது அதே 5 கி.மீற்றர் தூரத்தை 20 நிமிடத்தில் கடக்க முடியும் என்று கூறுகிறார்.

இதன் காரணமாகவே வரும் ஞாயிற்றுக் கிழமை Hampton Court பகுதியில் நடைபெறவிருக்கும் மராத்தான் போட்டியிலும் கலந்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார். Luke ஆரம்பத்தில் அவரின் எடை 22 ஸ்டோன் அதாவது 152 கிலோ எடை இருந்தார். அதுவே ஜிம், உணவு பழக்க வழக்கம் என ஒரு வருடத்தில் 11 ஸ்டோன் குறைத்து இப்போது 83 கிலோ எடை இருப்பதாக கூறப்படுகிறது.