வவுனியா வீரர்கள் தேசிய ரீதியிலான குத்துச்சண்டையில் 15 பதக்கங்களை வென்று சாதனை!!

377

15 பதக்கங்களை வென்று சாதனை

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற வூசூ குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த வீரர்கள் வடமாகாண ரீதியில் கலந்து கொண்டு 15 பதக்கங்களை தனதாக்கிக் கொண்டுள்ளனர்.

வவுனியா ஏழாம் அறிவு தற்காப்பு கலை சங்கத்தின் தலைவரும், பயிற்றுவிப்பாளருமான எஸ்.நந்தகுமார் தலைமையில் சென்ற 15 வீரர். வீராங்கனைகள் தேசிய ரீதியில் கண்டியில் மாநகரசபை மண்டபத்தில் மார்ச் மாதம் 08, 09, 10 ஆம் திகதிகளில் பாடசாலை ரீதியாக நடைபெற்ற வூசூ குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டு 09 தக்கப்பதக்கங்களையும் 06 வெள்ளிப்பதக்கங்களை வென்று வட மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

வவுனியா பாடசாலை மாணவர்களான 09 வீரர்களும் 06 வீராங்கனைகளும் பாடசாலை ரீதியாக நடைபெற்ற வூசூ குத்துச்சண்டை தேசிய மட்டப் போட்டியில் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த ச.சஞ்சயன், தி.நாகராஜா, பா.ராகுல், ம.பிரகத்தியன் ஆகியோர் தங்கப்பதக்கங்களையும்,

முகமட் றிஸ்கான் வெள்ளி பதக்கங்களையும் அகில இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை சேர்ந்த ஆர்.கெ.கெவின் வெள்ளி பதக்கத்தையும், கோவில்குளம் இந்துக் கல்லூரியை சேர்ந்த க.டிலக்சினி, எம்.கிசாளினி தங்கப்பதக்கங்களையும்,

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த வி.வசீகரன் தங்கப்பதக்கத்தையும், கூமாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலயத்தை சேர்ந்த எஸ்.சிறிதர்சன் வெள்ளி பதக்கத்தையும், காமினி மகாவித்தியாலயத்தை சேர்ந்த எம்.கிருபாலினி தங்கப்பதக்கத்தையும்,

எஸ்.நவப்பிரியா, எஸ்.துலக்சனபிரியா ஆகியோர் வெள்ளிப்பதக்கத்தையும், கந்தபுரம் வாணி வித்தியாலயம் எஸ்.றோகினி வெள்ளி பதக்கத்தையும் மற்றும் நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தை சேர்ந்த க.நிறோஜன் தங்கப்பதக்கத்தையும் சுவீகரித்துள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்த எட்டு பாடசாலை வீரர் வீராங்கனைகள் ‘கண் போய்ஸ்’ விளையாட்டு கழகத்தினூடாக வூசூ குத்துச்சண்டையில் கலந்துகொண்டு பதக்கங்களை பெற்று வவுனியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.