முகம் கிழிக்கப்பட்டு விலங்குகளுக்கு உணவாக வீசப்பட்ட மாணவி : மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்!!

1


மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்


பிலிப்பைன்ஸ் நாட்டில் 16 வயது சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதற்கு அந்நாட்டு மக்கள் கண்டனங்கள் தெரிவித்துள்ள நிலையில் குற்றவாளியை அடையாளம் காட்டுபவர்களுக்கு சன்மானம் அறிவித்துள்ளது பிலிப்பைன்ஸ் காவல்துறை.

இரண்டு நாட்களுக்கு முன்னர் 16 வயதான மாணவி ஒருவர் அரை நிர்வாணத்துடன், முகம் கழுத்து ஆகிய பகுதிகள் பாதி சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். விசாரணையில், மரிபாகோ நேஷனல் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி சிலாவன் என தெரியவந்தது.மாலை பள்ளி முடிந்த பிறகு அங்கிருக்கும் தேவாலயத்தில் வேலை செய்வார். கடந்த ஞாயிற்றுக் கிழமையும் வழக்கம் போல தேவாலயத்துக்குச் சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் தான் சிலாவன் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் வெளியான தகவல் கொடூரத்தின் உச்சமாக இருந்துள்ளது.

சிலாவனின் உடல் பாகங்களில் பாதி காணாமல் போயுள்ளது . நாக்கு, சுவாசக் குழாய், உணவுக் குழாய், தொண்டை, வலது காது ஆகியவற்றைக் காணவில்லை. மேலும், சிலாவனின் முகத்தில் உள்ள தோல் கிழிக்கப்பட்டு எலும்பு வெளியில் தெரியும் அளவுக்கு கொடுமையான முறையில் இருந்தது தெரியவந்தது. இவை அனைத்தையும் செய்வதற்கு முன் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும் பின்னர் தெரியவந்துள்ளது.


தொடர்ந்து நடந்த விசாரணையில், சிலாவனை யாரேனும் கொலை செய்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வீசியிருக்க வேண்டும். இரவில் விலங்குகள் அவரின் உடலைச் சிதைத்திருக்க வேண்டும் என காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர்

இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குற்றவாளியை கண்டித்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என அந்நாட்டு மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும், குற்றவாளியை அடையாளம் காட்டுபவர்களுக்கு பிலிப்பைன்ஸ் பண மதிப்புப் படி ஒரு லட்சம் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.