மலேசிய செல்வந்தர்கள் பட்டியலில் இலங்கை வம்சாவளி தமிழர்கள் இருவர்!!

324


மலேசிய செல்வந்தர்கள்



இலங்கை வம்சாவளி தமிழரான மலேசிய தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன், அந்நாட்டு செல்வந்தர்களில் நான்காம் இடத்தில் இருப்பதாக போர்ப்ஸ் மலேசியா தெரிவித்துள்ளது. மற்றுமொரு இலங்கை வம்சாவளி தொழிலதிபரான ஜீ. ஞானலிங்கம், செல்வந்தர்கள் வரிசையில் 17வது இடத்தில் உள்ளார்.



தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் தொலைத் தொடர்பு, ஊடகம், எரிபொருள் துறைசார்ந்த தொழிலதிபராக இருந்து வருகிறார். ஞானலிங்கம் துறைமுகம் சார்ந்த தொழில் துறை அதிபராக இருந்து வருகிறார். ஆனந்த கிருஷ்ணனின் சொத்து மதிப்பு 620 கோடி அமெரிக்க டொலர்கள் என்பதுடன் ஞானலிங்கத்தின் சொத்து மதிப்பு 950 மில்லியன் டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இலங்கை வசம்சாவளி தமிழரான ஆனந்த கிருஷ்ணன், மலேசியாவின் கோலாலம்பூர், பிரிக்ஸ்பீல்ட் பகுதியில் இலங்கை பெற்றோருக்கு பிறந்தவர் என்பதுடன் ஞானலங்கம் சிங்கப்பூரில் பிறந்தவர்.


போர்ப்ஸ் மலேசியாவின் விபரங்களின் அடிப்படையில், மலேசியாவில் உள்ள முதல் நான்கு செல்வந்தர்களில் மூன்று பேர் சீனர்கள். ரொபர்ட் குவோக் ஆயிரத்து 280 கோடி டொலர்கள் சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஹோங் லியோங் 940 கோடி டொலர் சொத்துக்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளதுடன் ஹோங் பியோவ் 670 கோடி டொலர் சொத்துக்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளனர்.