கணவர்களுக்காக கிட்னியை பறிமாறிக் கொண்ட இந்து – முஸ்லிம் மனைவிகள் : நெகிழ்ச்சி சம்பவம்!!

352

நெகிழ்ச்சி சம்பவம்

மும்பையில் கணவர்களுக்காக இந்து மற்றும் முஸ்லீம் மனைவிகள் தங்களுடைய கிட்னியை பரிமாறிக்கொண்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் நதீம் (51). இவரது மனைவி நஸ்ரின் பட்டேல்(45). இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த நதீம் கடந்த 4 வருடங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்ததால் மும்பையில் உள்ள சாய்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதே மருத்துவமனையில் பீகாரைச் சேர்ந்த ராம்ஸ்வரத் யாதவ் (53) என்பவரும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிறுநீரகத்தை தானம் செய்வ அவருடைய மனைவி சத்யதேவி (45) முன்வந்துள்ளார்.

ஆனால் அவருடைய ரத்த பிரிவு ராம்ஸ்வரத்துடன் ஒத்துவரவில்லை. அதேபோல நஸ்ரின் கிட்னியும் நதீமிற்கு ஒத்துப்போகவில்லை. அப்போது நதீமுக்கு சத்யதேவியின் ரத்த பிரிவும், ராம்ஸ்வரத்துக்கு நஸ்ரின் ரத்தபிரிவும் ஒத்துப்போயுள்ளது. இதனை கவனித்த மருத்துவர் ஹேமால் ஷா, கிட்னியை இருவரின் கணவர்களுக்கு மாற்றி பரிமாறிக்கொள்ளலாம் என ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கு இருவீட்டாரும் சம்மதிக்க உடனடியாக அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இருவரின் கிட்னிகளும் கணவர்களுக்காக மாற்றி பொருத்தப்பட்டது. இந்த சம்பவமானது மத நல்லினத்திற்கு ஒரு முன்மாதிரி போல இருப்பதாக பலரும் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.