வவுனியாவில் புத்தரால் நாகபூசணி அம்மனுக்கு ஆபத்து!!

627

வவு­னியா, மூனா­மடு நாகபூசணி அம்­மன் ஆல­யக் காணியை அப­க­ரித்து பௌத்த மதத்­த­லம் அமைக்க முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது என்று குற்றஞ்சாட்­டப்­ப­டு­கின்­றது.

முனா­மடு மற்­றும் பேயா­டிக்­கூ­ழாங்­கு­ளம் ஆகிய இடங்­க­ளில் தமிழ் மக்­கள் தொன்­று­தொட்டு விவசாயம் மேற்­கொண்டு வரு­கின்­ற­னர். அவர்­கள் தமது வயல் நிலங்­க­ளுக்கு அருகே ஆல­யங்­களை அமைத்து வழி­பட்டு வந்­த­து­டன், இளைப்­பா­று­மி­டம் என்­ப­வற்­றை­யும் அமைத்­தி­ருந்­த­னர்.

மூனா­ம­டு­வில் அமைந்­தி­ருந்த நாகபூசணி அம்­மன் ஆல­யம் நீண்டகாலமாக தமிழ் மக்­க­ளால் பேணப்­பட்டு வந்தது.

1995ஆம் ஆண்­டின் பிற்­ப­கு­தி­யில் அந்­தப் பகு­தியை இலங்கை இரா­ணு­வம் கைய­கப்­ப­டுத்­தி­யது. அவர்களால் அமைக்­கப்­பட்ட முகா­மில் வழிபாட்டுக்காக புத்­தர் சிலை ஒன்­றை­யும் அவர்கள் நிறு­வி­யி­ருந்­த­னர்.

பின்­னர் அந்­தக் காணி­கள் மக்­கள் பயன்பாட்டுக்காக விடு­விக்­கப்­பட்­ட­போ­தும், அங்கு நிறு­வப்­பட்ட புத்­தர் சிலை அகற்­றப்­ப­ட­வில்லை. தற்போது வவு­னி­யா­வில் உள்ள பிக்கு ஒரு­வர் அந்­தப் பகு­தி­யைத் தன்­னி­டம் ஒப்­ப­டைக்க வேண்­டும் என்று கோரு­கின்­றார் என்று குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கின்­றது.

இது தொடர்­பில் வவு­னியா மாவட்ட அந்­த­ணர் ஒன்றியம், அந்­தக் காணி இந்து ஆல­யம் அமைந்துள்ள பகுதி. அந்­தக் காணி நாகபூசணி அம்மன் ஆல­யக் காணி என்று பிர­தேச செய­ல­க­மும் கூறி­யுள்­ளது. அதற்­கான ஆதா­ரங்­க­ளும் உள்­ளன. அதை வேறு எவ­ரும் உரிமை கோரவோ, கைய­கப்­படுத்­தவோ அனு­ம­திக்க முடி­யாது என்று கூறியுள்ளது.

வடக்­கில் புத்­தர் சிலை­கள் நிறு­வப்­பட்­டுள்ள காணி­க­ளில் பெரும்­பா­லா­னவை தனி­யார் காணி­களே. புத்­தர் சிலையை அனைத்து இடங்­க­ளி­லும் நிறுவி அந்த இடங்­க­ளைச் சொந்­தம் கொண்­டாட நினைப்­பது நல்­லி­ணக்­கத்­தைச் சீர்­கு­லைக்­கும். புத்த பெரு­மா­னின் போத­னை­களை ஏற்று நடக்­கும் எவ­ரும் இவ்­வா­றான காரி­யங்­க­ளைச் செய்ய மாட்­டார்­கள்.

அந்த இடத்­தில் நிறு­வப்­பட்ட புத்­தர் சிலையை அகற்றி, தமிழ் மக்­கள் பூர்­வீ­க­மாக மேற்­கொண்­டு­வ­ரும் வழி­பாட்டு நட­வ­டிக்­கை­க­ளுக்கு இட­ம­ளிக்க வேண்­டும் என்­றும் வவு­னியா மாவட்ட அந்­த­ணர் ஒன்­றி­யம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

அதே­வேளை, இந்த விட­யம் தொடர்­பான கலந்­து­ரை­யா­டல் ஒன்று எதிர்­வ­ரும் 21ஆம் திகதி வவு­னியா மாவட்­டச் செய­ல­கத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

-உதயன்-