பிறந்த குழந்தையின் கருப்பைக்குள் இன்னொரு குழந்தை : ஒரு அபூர்வ நிகழ்வு!!

599

அபூர்வ நிகழ்வு

பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த நிலையில், அந்த குழந்தையின் கருப்பைக்குள் இன்னொரு குழந்தை இருந்த அபூர்வ நிகழ்வு ஒன்று கொலம்பியாவில் நடைபெற்றுள்ளது. அதாவது தனது இரட்டையரான இன்னொரு குழந்தையை அந்த குழந்தை தன் கர்ப்பத்தில் சுமந்துள்ளது.

Monica Vega (33) கருவுற்றிருந்த நிலையில், அவரது மருத்துவர், குழந்தையின் கருப்பைக்குள் இன்னொரு குழந்தை இருப்பதை அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறிந்தார். Monica கருவுற்று 37 வாரங்கள் ஆன நிலையில், மருத்துவர்கள் குழு ஒன்று, Itzamara என்று பெயரிடப்பட்ட அவரது மகளை சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கச் செய்தது.

அதற்குமேல் விட்டால், அவளுக்குள் வளரும் குழந்தையால் Itzamaraவின் உள்ளுறுப்புகளுக்கு சேதம் ஏற்படலாம் என்ற அச்சத்தில், அவள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்க செய்யப்பட்டாள்.

Itzamara பிறந்து ஒரு நாளுக்குப்பின், அவளுக்கு சிறு அறுவை சிகிச்சை ஒன்றை செய்த மருத்துவர்கள், அவளுக்குள் இருந்த 45 மில்லிமீற்றர் நீளமும், 14 கிராம் எடையும் கொண்ட அவளது இரட்டையரான குழந்தையை அகற்றினர். அவளது தொப்புள் கொடி வெட்டப்பட்டதும் அந்த இரண்டாவது குட்டிக் குழந்தையின் உயிர் பிரிந்தது.

அவளுக்கு கைகளும் கால்களும் இருந்தன, ஆனால் இதயமோ மூளையோ இல்லாமலிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது Itzamara பிறந்து ஒரு மாதம் ஆன நிலையில், அவள் ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரியவந்துள்ளது.