புற்றுநோய் குணமாக ஒரு பாட்டில் புழுக்களை சாப்பிட்ட பெண் : மருத்துவர்கள் அதிர்ச்சி!!

598


மருத்துவர்கள் அதிர்ச்சி



சீனாவில் புழுக்களை சாப்பிட்டால் புற்று நோய் குணமாகும் என்று நண்பர்கள் கூறியதால், தற்போது அவர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார்.



சீனாவின் Xi’an மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2016-ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு நுரையிரலில் புற்றுநோயின் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.




இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவரிடம், அந்த பெண்ணின் நண்பர்கள் புழுக்களை சாப்பிட்டால் புற்றுநோய் குணமாகிவிடும் என்று கூறியுள்ளனர். இதனால் தனக்கு எப்படியாவது குணமாகிவிட வேண்டும் என்பதற்காக மருத்துவர்களிடம் கூட இதைப் பற்றி கேட்காமல், ஒரு பாட்டில் புழுக்களை அப்படியே சாப்பிட்டுள்ளார். அதன் பின் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருக்கு வயிற்று வலி, நெஞ்சில் வலி , சரியாக தூக்கமில்லாமல் தவித்து வந்துள்ளார்.


வலிதாங்க முடியாமல் தவித்த அவர் உடனடியாக, தான் எப்போதும் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் சொன்னதைக் கேட்ட மருத்துவர்கள், புற்றுநோய் தான் உடல் முழுதும் பரவிவிட்டதோ, அதனால் தான் இவருக்கு இப்படி பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என்று அதற்கான பரிசோதனையில் இறங்கியுள்ளனர்.

ஆனால் பரிசோதனையில் புற்றுநோயின் தாக்கம் எங்கும் உடலில் பரவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால் மருத்துவர்கள் குழம்பி போய் வயிற்றை ஸ்கேன் செய்து, டிவி மானிட்டரில் பார்த்த போது அதிர்ச்சியடைந்துள்ளனர்.


ஏனெனில் அவரின் வயிற்றின் உள்ளே ஏதோ ஒன்று நகர்வது போன்று இருந்துள்ளது. அதன் பின் சற்று உற்று நோக்கி கவனித்த போது, அவரின் வயிற்றின் உள்ளே 5 புழுக்கள் உயிரோடு இருந்துள்ளன.இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அந்த பெண்ணிடம் கேட்ட போது, நடந்தவற்றை கூறியுள்ளார்.

அதன் பின் அங்கிருக்கும் மருத்துவர் Wang கூறுகையில், இது நோயாளிகளுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி எனவும் இது போன்று செய்வதால் புற்றுநோய் குணமாகாது, அதற்கு வாய்ப்பே இல்லை, இது போன்ற செயலில் ஈடுபடாதீர்கள் என்று கூறியுள்ளார். சிகிச்சை பெற்று வந்த அந்த பெண்ணிற்கு இப்போது அந்தளவிற்கு வயிற்று வலி இல்லை எனவும், நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.