வவுனியாவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதற்கான மாநாடு!!

348

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

வன்னி மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை மறுசீரமைத்து அங்கத்துவத்தை பலப்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கட்சியின் மாநாடு வன்னி மாவட்ட சுதந்திரக்கட்சியின் பிரதம அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.கே.மஸ்தான் தலைமையில் நேற்று (23.03) வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளரரும், குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி கலந்துகொண்டிருந்தார்.

ஆரம்ப நிகழ்வாக வன்னி பாராளுமன்ற உறுப்பினரால் அழைத்துவரப்பட்ட அதிதிகள் மங்கள விளக்கேற்ற சர்வமத குருக்களின் ஆசிர்வாத செய்தியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.

வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கட்சி மாநாட்டில் வன்னி மாவட்டத்திலுள்ள 582 கிராம சேவகர் பிரிவிலும் கட்சியின் உறுப்பினர்களை நியமிப்பது, அங்கத்தவர்களை கட்சிக்குள் உள்வாங்குவது, கட்சியின் தேசியக் கொள்கை, பொருளாதாரக் கொள்கை மற்றும் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான விளக்கங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளரால் அளிக்கப்பட்டது.

இதன்போது வன்னியில் எதிர்காலத்தில் கட்சியை கட்டமைத்து முன்னேற்றுவது குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்டது.