உங்கள் பேஸ்புக் பாஸ்வேர்டை உடனே மாற்றுங்கள் : எச்சரிக்கும் வல்லுநர்கள்!!

617


பேஸ்புக்



சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் பேஸ்புக் பாஸ்வேர்டை மாற்றுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். பேஸ்புக் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தங்கள் தளத்தில் இருந்த கோளாறு ஒன்று சரி செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தது.



அது 2 கோடிக்கும் மேலான கணக்குகளின் பாஸ்வேர்டுகள், எந்த ஒரு Encription-வும் இல்லாமல் Plain Text மட்டுமே சேமிக்கப்பட்டிருந்தது என்பது தான். இவற்றை சுமார் 20,000 பேஸ்புக் ஊழியர்கள் பார்த்திருக்க முடியும். இதனால் சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் உடனடியாக அனைவரும் தங்களது பேஸ்புக் பாஸ்வேர்டை மாற்றுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.




அத்துடன் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கலாம் என கருதப்படும் கணக்குகளுக்கு இது குறித்து தெரிவிக்கப்படும் என்று பேஸ்புக் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், இதனால் எந்த பாதிப்பும் நடந்திருக்க வாய்ப்பில்லை எனக் கூறும் பேஸ்புக், யாராவது உங்களின் பாஸ்வேர்டை பெற்றிருந்தால் அதனை தவறாக பயன்படுத்தலாம் என்றும் எச்சரித்துள்ளது.


எனவே, உடனடியாக புதிய பாஸ்வேர்டை செட் செய்யுமாறும், Two-Factor Authentication முறையை On செய்யுமாறும் சைபர் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் இந்த பாஸ்வேர்டை மற்ற கணக்குகளுக்கும் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.