பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

1499


logo

 



 

 



 



 


1.”மலைப் பிஞ்சி” என்பது?

குறுமணல்


2.குமரி மாவட்டத்தின் பழைய பெயர்?
நாஞ்சில் நாடு

3. கலிங்க நாட்டின் தற்போதைய பெயர்?
ஒடிஷா

4.”தமிழ் மொழி” என்பது?
இரு பெயரொட்டுப் பண்புத்தொகை

5.”இரவும் பகலும்” என்பது?
எண்ணும்மை


6.”கல்வியில் பெரியர் கம்பர்”-இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை?
ஐந்தாம் வேற்றுமை

7. ”நல்ல மாணவன்” என்பது?
குறிப்புப் பெயரெச்சம்

8. “கடி விடுது”-இச்சொல்லில் “கடி” என்பதன் பொருள்?
விரைவு

9. செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையில் நிறுவப்பட்ட ஆண்டு?
2008, மே 19

10. உயிர் அளபெடையின் மாத்திரை?
3 மாத்திரை

11. வல்லின உயிர் மெய் நெடில் எழுதுக்கள்?
42

12. தமிழில் கலைக்களஞ்சியம் அடிப்படையில் அமந்த நூல்?
அபிதான கோசம்

13. சங்க காலத்தில் நிலம் எத்தனை வகைகளாக இருந்தது?
5

14. ”ஓடி கூடி” இச்சொற்களில் அமைந்துள்ள யாப்பிலக்கணம்?
எதுகை

15. முதல் சொல்லின் இறுதி எழுத்து அடுத்த சொல்லின் முதல் எழுத்தாக அமைவது?
அந்தாதி

16. ”கண்ணே மணியே முத்தம் தா”-குழந்தைப் பாடலின் ஆசிரியர்?
கவிமணி

17. ”கட்டிக் கரும்பே முத்தம் தா”-இத்தொடரில் உள்ள கட்டிக் கரும்பே என்பதன் இலக்கணம்?
உருவகம்

18. ”நிலா நிலா ஓடி வா”-குழந்தைப் பாடலை இயற்றியவர்?
அழ. வள்ளியப்பா

19. ”பச்சைக் கிளியே வா வா”-குழந்தைப் பாடலின் ஆசிரியர்?
கவிமணி

20. ”பச்சைக் கிளியே வா வா”-இப்பாடல் வரியில் ”வா வா” எனும் தொடர்?
அடுக்குத் தொடர்

21. மகாபாரதத்தின் படி துரியோதனன், பீமன் இவர்களுக்கு கதாயுதம் பயிற்சி அளித்தவர்?
பலராமன்

22. ”அஞ்சுகம்” என்ற சொல் எதைக் குறிக்கும்?
கிளி

23. ”தாய்மொழி” என்பது?
தாய் குழந்தையிடம் பேசுவது

24. ”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்துப் பிறந்த மொழி”-எனும் தொடர் உணர்த்துவது?
தமிழின் பழமை

25. இரண்டாம் வேற்றுமை உருபு?

26. ”வனப்பு” எனும் சொல்லின் பொருள்?
அழகு

27. ”காலை மாலை”-இதில் பயின்று வருவது?
உம்மைத் தொகை

28. அடிதோறும் மாறிக் கிடக்கும் சொற்களை, பொருள் கொள்ளும் வகையில் அமைப்பது?
கொண்டுக் கூட்டுப் பொருள் கோள்

29. ”தளை” எத்தனை வகைப்படும்?
7

30. ”அஞ்சு”-இதில் உள்ள போலி?
முற்றுப் போலி

31. மூவகைச் சீர்களின் எண்ணிக்கை?
8

32. மகரக் குறுக்கத்திற்கான மாத்திரை அளவு?
3/4

33. திராவிட மொழி____________?
ஒட்டு நிலைமொழி

34. தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்?
இளம் பூரணார்

35. தமிழ் நெடுங்கணக்கு எழுதும் முறை?
இடமிருந்து வலம்

36. திராவிட மொழி பற்றி ஆராய்ந்த அமெரிக்கர்?
எமனோ

37. அணி இலக்கணத்தை விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்தியம்பும் இலக்கண நூல்?
தண்டியலங்காரம்

38. தொல்காப்பியம் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள்?
3

39. களவியலுக்கு உரை எழுதியவர்?
நக்கீரர்

40. தொல்காப்பியம் எத்தனை பிரிவுகளை உடையது?
3 (எழுத்து, சொல், பொருள்)

41. நாற்கவிராச நம்பி எழுதிய நூல்?
அகப்பொருள்

42. மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல்?
பேகன்

43. முற்றியலுகரத்தில் முடியும் எண்?
7

44. பத்துப்பாட்டு நூல்களில் அளவில் சிறியது?
முல்லைப் பாட்டு

45. எழுவாய் தானே ஒரு செயலை செய்யுமாயின் அது _______________ எனப்படும்?
தன்வினை

46. பொருள்பட சொற்றொடர் அமைந்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டு?
யாதும் ஊரே யாவரும் கேளீர்

47. ”அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை”-இக்குறளில் அமைந்துள்ள அணி யாது?
உவமையணி

48. ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனக் கூறியவர்?
திருமூலர்

49. ”காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டு காலன் ஓடிபோவானே” எனப் பாடியவர்?
தேசிக விநாயகம் பிள்ளை

50. வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் வர ‘ண” கர மெய் _____________ ஆக மாறும்?
”ட” கர மெய்

தொடர்ந்து வரும்..