பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

1046


logo

சென்றவார தொடர்ச்சி…



251. ”நிறை ஒழுக்கம்”-இச்சொற்றொடரின் இலக்கணம்?
வினைத் தொகை

252. ”பாடாக் குயில்”-இச்சொல் காட்டும் இலக்கணம்?
ஈறுக்கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்



253. ”நீராருங் கடலுடுத்த” என்ற தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்?
“மனோன்மணீயம்” பெ.சுந்தரனார்



254. ”ஜன கண மண” எனும் தேசிய கீதம் பாடியவர்?
இரவீந்தரநாத் தாகூர்


255. “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாடலை இயற்றியவர்?
மகாகவி பாரதியார்

256. திருவருட்பாவை இயற்றியவர்?
இராமலிங்க அடிகளார்


257. ”திருவருட்பிரகாச வள்ளலார்” என்னும் சிறப்பு பெயர் பெற்றவர்?
இராமலிங்க அடிகளார்

258. இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர்?
கடலூர் மாவட்டம் மருதூர்

259. இராமலிங்க அடிகளாரின் பெற்றோர்?
இராமையா-சின்னம்மையார்

260. இராமலிங்க அடிகளார் எழுதிய நூல்கள் எவை?
ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்


261. மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையையும், அறிவு நெறி விளங்க ஞான சபையையும் நிறுவியவர்?
இராமலிங்க அடிகளார்

262. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர்?
இராமலிங்க அடிகளார்

263. ”ஆர்வலர்”– பொருள் தருக?
அன்புடையவர்

264. “என்பு”– பொருள் தருக?
எலும்பு (உடல், பொருள், ஆவி)

265. ”வழக்கு”– பொருள் தருக?
வாழ்க்கை நெறி

266. ”ஈனும்”– பொருள் தருக?
தரும்

267. “ஆர்வம்”- பொருள் தருக?
விருப்பம்

268. “நண்பு”- பொருள் தருக?
நட்பு
269. “வையகம்”- பொருள் தருக?
உலகம்
270. ”மறம்”- பொருள் தருக?
வீரம்

271. ”என்பிலது”- பொருள் தருக?
எலும்பில்லாதது (புழு)

272. ”வற்றல் மரம்”- பொருள் தருக?
வாடிய மரம்

273. ”புறத்துறுப்பு”- பொருள் தருக?
உடல் உறுப்புகள்

274. திருக்குறளை இயற்றியவர்?
திருவள்ளுவர்

275. திருவள்ளுவர் வாழ்ந்த காலம்?
கி.மு.31

276. திருவள்ளுவரின் வேறு பெயர்கள்?
செந்நாப் போதார், தெய்வப் புலவர், நாயனார்

277. திருக்குறளின் பெரும் பிரிவுகள்?
அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்

278. திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
133

279. திருக்குறளில் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் எத்தனை குறட்பாக்கள் உள்ளன?
10

280. திருக்குறளில் மொத்தம் எத்தனை குறட்பாக்கள் உள்ளன?
1330

281. திருக்குறள் பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்று. சரியா? தவறா?
சரி

282. திருக்குறளின் வேறு பெயர்கள்?
முப்பால், பொதுமறை, தமிழ்மறை, உலகப் பொதுமறை

283. திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை?
கிறித்து ஆண்டு (கி.பி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு

284. தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படுபவர்?
உ.வே.சாமிநாதய்யர்

285. ஆடிப்பெருக்கில் ஆற்றில் விட்ட பழைய ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்தவர்?
உ.வே.சாமிநாதய்யர்

286. தமிழ்த்தாத்தா எந்த ஊரின் ஆற்றில் விட்ட ஓலைச் சுவடிகளைத் தேடி எடுத்தார்?
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி

287. குறிஞ்சிப் பாட்டில் எத்தனை பூக்களுடைய பெயர்கள் உள்ளன?
99

288. பத்துப்பாட்டு நூல்களுல் ஒன்று?
குறிஞ்சிப் பாட்டு

289. குறிஞ்சிப் பாட்டின் ஆசிரியர்?
கபிலர்

290. தமிழகத்தில் ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப்படும் இடங்கள்?
கீழ்த்திசை சுவடிகள் நூலகம்-சென்னை, அரசு ஆவணக் காப்பகம்-சென்னை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்-சென்னை,சரஸ்வதி மஹால்-தஞ்சாவூர்

291. உ.வே.சாமிநாதய்யர் பிறந்த ஊர்?
திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம்

292. உ.வே.சாமிநாதய்யரின் இயற்பெயர்?
வேங்கடரத்தினம்

293. தமிழ்த்தாத்தாவிற்கு ஆசிரியராக இருந்தவர்?
மீனாட்சி சுந்தரம் பிள்ளை

294. தமிழ்த்தாத்தாவிற்கு அவருடைய ஆசிரியர் வைத்த பெயர்?
சாமிநாதன்

295. உ.வே.சா.வின் விரிவாக்கம்?
உத்தமதானபுரம் வேங்கட சுப்பையா மகனான சாமிநாதன்

296. உ.வே.சா. எந்த இதழில் தன் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதினார்?
ஆனந்த விகடன்

297. உ.வே.சா. வின் வாழ்க்கை வரலாறு எந்த பெயரில் நூலாக வெளிவந்தது?
என் சரிதம்

298. உ.வே.சா. பதிப்பித்த நூல்கள்?
எட்டுத்தொகை-8; பத்துப்பாட்டு-10; சீவக சிந்தாமணி-1; சிலப்பதிகாரம்-1; மணிமேகலை-1; புராணங்கள்-12; உலா-9; கோவை-6; தூது-6; வெண்பா நூல்கள்-13; அந்தாதி-3; பரணி-2; மும்மணிக் கோவை-2; இரட்டைமணிமாலை-2;இதர பிரபந்தங்கள்-4;

299. உ.வே.சா. அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் எந்த ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது?
2006

300. தமிழின் முதல் எழுத்து எது?

தொடர்ந்து வரும்..