கடலில் வீடு கட்டிய அமெரிக்க கோடீஸ்வரர்கள் : மரண தண்டனை விதிக்கப்பட்டதால் தலைமறைவு!!

409

கடலில் வீடு கட்டிய  கோடீஸ்வரர்கள்

அமெரிக்க பிட்காயின் முதலீட்டாளர்களான கோடீஸ்வர தம்பதி கடலில் கட்டிய வீடு தங்கள் நாட்டின் இறையாண்மையை மீறுவதாகக் கூறி அவர்களுக்கு மரண தண்டனை வழங்க தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளதையடுத்து அவர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.

Chad Elwartowski என்னும் அமெரிக்க கோடீஸ்வரர் தனது காதலியான தாய்லாந்தைச் சேர்ந்த Supranee Thepdetஉடன் தாய்லாந்து கடல்பகுதியில் கடல் வீடு ஒன்றைக் கட்டியுள்ளதோடு தொடர்ந்து பல வீடுகளைக் கட்ட கட்டுமான நிறுவனங்களுக்கு அழைப்பும் விடுத்திருந்தார்.

தாய்லாந்து அந்த தம்பதி கடல் வீட்டைக் கட்டியதன்மூலம் தங்கள் நாட்டின் இறையாண்மையை மீறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் Chad தான் கரையிலிருந்து 13 நாட்டிக்கல் மைல் தொலைவில்தான் வீடு கட்டியுள்ளதாகக் கூறியுள்ளார்.

தாய்லாந்தின் பிட்காயின் பெண் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் Supranee, அந்த கடல் வீட்டில் அமர்ந்து மதுபானம் அருந்தும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதற்கிடையில் தம்பதியினர் மீது மரண தண்டன விதித்துள்ள தாய் அரசு அவர்களை தேடுவதை அறிந்ததும் அவர்கள் தலை மறைவாகிவிட்டனர்.

எந்த அரசின் கட்டுப்பாட்டிலும் அந்த வீடு வரவில்லை என்று கூறப்பட்டாலும், தாய்லாந்தின் பொருளாதார மண்டலத்திற்குள் அது இருப்பதாக கூறப்படுகிறது. சுதந்திரமாக இருக்கவேண்டும் என்று எண்ணியதைத் தவிர நாங்கள் சட்ட விரோதமாக எதையும் செய்யவில்லை என்று அந்த தம்பதியினர் கூறியுள்ளனர்.

தம்பதி தலைமறைவாகியுள்ளதோடு, அவர்களது நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், Chadம் Supraneeயும் அந்த வீட்டுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.