பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

1426


logo

சென்றவார தொடர்ச்சி..
301.“அ” என்ற எழுத்து எதனைக் குறிக்கிறது?
மனிதன்



302. “அ” வில் உள்ள | எதைக் குறிக்கிறது?
வேட்டை ஆடுவதற்கு மனிதன் முதுகில் சுமந்த அம்புக் கூடு

303. நட்பு எழுத்துக்களுக்கு எடுத்துக்காட்டு தருக?
ங்க, ந்த, ஞ்ச, ம்ப, ண்ட, ன்ற



304. நட்பு எழுத்துக்களை ________________ என மரபிலக்கணம் கூறுகிறது?
இன எழுத்துக்கள்



305. “தமக்குரியர்” – பிரித்து எழுதுக?
தமக்கு + உரியர்


306. “அன்பீனும்” – பிரித்து எழுதுக?
அன்பு + ஈனும்

307. ”நிழலருமை” – பிரித்து எழுதுக?
நிழல் + அருமை


308. ”வழக்கென்ப” – பிரித்து எழுதுக?
வழக்கு + என்ப

309. ”புறத்துறுப்பு” – பிரித்து எழுதுக?
புறம் + உறுப்பு

310. ”தரமில்லை” – பிரித்து எழுதுக?
தரம் + இல்லை

311. ”பருப்பு + உணவு” – சேர்த்து எழுதுக?
பருப்புணவு


312. ”கரும்பு + எங்கே” – சேர்த்து எழுதுக?
கரும்பெங்கே

313. “அவன் + அழுதான்” – சேர்த்து எழுதுக?
அவனழுதான்

314. ”அவள் + ஓடினாள்” – சேர்த்து எழுதுக?
அவளோடினாள்

315. ”முயற்சி திருவினை ஆக்கும்” எனக் கூறியவர்?
திருவள்ளுவர்

316. நாலடியாரை இயற்றியவர்?
சமண முனிவர்

317. ”நாய்க்கால்” – பொருள் தருக?
நாயின் கால்

318. ”ஈக்கால்” – பொருள் தருக?
ஈயின் கால்

319. ”அணியர்” – பொருள் தருக?
நெருங்கி இருப்பவர்

320. “என்னாம்?” – பொருள் தருக?
என்ன பயன்

321.”சேய்” – பொருள் தருக?
தூரம்

322. ”செய்” – பொருள் தருக?
வயல்

323. மூவலூர் ராமாமிர்தம் பிறந்த ஆண்டு?
1883

324. உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் எத்தனை?
126
325. ”புதிய விடியல்கள்” என்ற நூலை எழுதியவர்?
தாரா பாரதி

326. ”அவல்” – பொருள் தருக?
பள்ளம்

327. ”மக்கள் கவிஞர்” என்றழைக்கப்படுகின்றவர்?
கல்யாண சுந்தரம்

328. மூவினம், மூவிடம், முக்காலம், மூவுலகம் – பொருத்தம் இல்லாதது எது?
மூவிடம்

329. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் – அகர வரிசைப்படுத்துக?
ஆகாயம், காற்று, நிலம், நீர், நெருப்பு

330. திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
107

331. ஹிந்தி செம்மொழி இல்லை. சரியா? தவறா?
சரி

332. ”மதுரை” என்ற பெயர் முக்காலத்தில் கல்வெட்டில் எவ்வாறு வந்தது?
மதிரை

333. ஈச்சந்தட்டை-பிழைத் திருத்தம் செய்க?
ஈச்சந்தட்டு

334. யானை, கரும்பு இச்சொற்களைக் குறிக்கும் சொல்?
வேழம்

335. ”முயற்சி செய்” – எத்தொடர் எனக் கூறுக?
கட்டளைத் தொடர்

336. பாரதிதாசனின் இயற்பெயர்?
கனக சுப்புரத்தினம்

337. ”அகரம் + ஆதி” – சேர்த்தெழுதுக?
அகராதி

338. “பைங்குவளை” – பிரித்தெழுதுக?
பசுமை + குவளை

339. தமிழ் எழுத்துக்களை எழுதவும், ஒலிக்கவும் கற்றுத் தரும் இணையதளம்?
தமிழகம்

340. ”கயல்விழி” என்பது?
உவமைத் தொகை

341. மா, பலா, வாழை என்பது?
உம்மைத் தொகை

342. சென்னையில் ______பெயரில் நூலகம் உள்ளது?
தேவநேயப்பாவாணர்

343. “அழகின் சிரிப்பு” நூலை எழுதியவர் யார்?
கண்ணதாசன்

344. ”மதிமுகம்” உருவகமாய் மாறும் போது ____________ ஆகும்?
முகமதி

345. ”நெஞ்சாற்றுப்படை” என்று அழைக்கப்படும் பத்துப் பாட்டு நூல் எது?
முல்லைப் பாட்டு

346. குமார சம்பவம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் யார்?
காளிதாஸ்

347. குமார சம்பவம் என்றால் என்ன?
முருகன் பிறந்த கதை

348. துரியோதனின் தங்கை பெயர்?
துஷாலா

349. இராமாயணத்தில் வரும் பரதனின் தாயார் யார்?
கைகேயி

350. வால்மீகி ராமாயணத்தை எந்த மொழியில் எழுதினார்?
சமஸ்கிருதம்

351. ”தரணி” என்றால் என்ன?
பூமி

352. 1964-ல் வெளிவந்த கலைஞரின் பூம்புகார் திரைப்படம் எந்த காப்பியத்தைத் தழுவியது?
சிலப்பதிகாரம்

353. உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும் எனக் கூரியவர்?
நோம் சாம் சுகி

354. தமிழ் மொழியில் எத்தனை ஒரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் உள்ளன?
42

355. பணியும் குணம் கொண்டது?
பெருமை

356. நீதி நெறி விளக்கத்தின் ஆசிரியர்?
குமர குருபரர்

357. உடனிலை மெய் மயக்கம் பயின்று வருவது?
ஒப்பம்

358. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை எழுதியவர்?
திருவள்ளுவர்

359. உயிர் மெய் நெடில் எழுத்துக்களின் எண்ணிக்கை?
126

360. இரண்டாம் வேற்றுமை உருபு?

361. விடை வகைகள்?
8

362. யாப்பெருங்கலக் காரிகையின் ஆசிரியர்?
அமிர்த சாகரர்

363. நான்கு சீர்கள் கொண்ட அடி?
அளவடி

364. ஓர் அடியில் நான்கு சீர்களிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது?
முற்று எதுகை

365. ஆசிரியப்பாவின் வேறு பெயர்?
அகவற்பா

366. செந்தமிழ் என்பது?
பண்புத் தொகை

367. மோர்க்குடம் என்பது?
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை

368. வினை முற்றையோ, பெயர்ச் சொல்லையோ, வினைச் சொல்லையோ பயனிலையாகக் கொண்டு முடிவது?
முதல் வேற்றுமை

369. நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது என்னும் பொருளை உணர்த்தும் வேற்றுமை?
ஐந்தாம் வேற்றுமை

370. சொல்லின் செல்வர் எனப் பாராட்டப் பெற்றவர்?
ரா.பி.சேதுப்பிள்ளை

371. தொழிற்பெயர் _________ வகைப்படும்?
3

372. கவிப்பாவிற்குரிய ஓசை?
துள்ளல்

373. உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர்?
கவிமணி

374. உலா, பரணி, பிள்ளைத் தமிழ் ஆகிய மூன்று வகைச் சிற்றிலக்கியங்களையும் பாடியவர்?
ஒட்டக்கூத்தர்

375. அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலை எழுதியவர்?
கண்ணதாசன்

376. தேவாரம் பாடிய மூவர்?
அப்பர், சம்பந்தர், சுந்தரர்

377. பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டு மண்ணடிமை தூர்ந்து வருதல் முயற்கொம்பே என முழங்கியவர்?
பாரதிதாசன்

378. குறிஞ்சி நிலத்திற்குரிய பெரும்பொழுது?
யாமம்

379. முல்லை நிலத்திற்குரிய பெரும்பொழுது?
மாலை

380. மருதம் நிலத்திற்குரிய பெரும்பொழுது?
வைகறை

381. பாலை நிலத்திற்குரிய பெரும்பொழுது?
நண்பகல்

382. ”நரி கத்த, ஆந்தை பாட” – மரபு வழுவை நீக்குக?
நரி ஊளையிட, ஆந்தை அலற

383. மருத நில மக்கள் பாடும் சிற்றிலக்கியம்?
பள்ளு

384. திரிவேணி சங்கமம்?
சிந்து, கங்கை, சரஸ்வதி

385. மந்திராலயத்தில் ஜீவசமாதி அடைந்த ஆண்மீகத் தலைவர் யார்?
ஸ்ரீராகவேந்திரன்