வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் தொடர்பான பக்தர்களுக்கான வேண்டுகோள்!

975


வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த விசாக பொங்கல் உற்சவம் 2019 இற்கான உப்பு நீரில் விளக்கெரியும் அன்னைக்கு விளக்கேற்ற தீர்த்தம் எடுக்கும் உற்சவம் நேற்று மாலை சிறப்புற இடம்பெற்றது.



வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த விசாகப் பொங்கல் உற்சவம் எதிர்வரும் 20/05/2019 ம் திகதி திங்கள் கிழமை வழமை போன்று சிறப்பாக நடாத்த பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளது என்பதுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டள்ளது. எனவே அம்மன் அடியவர்கள் தங்கள் நேர்த்தி கடன்களை நிறைவேற்ற முடியும் என அறிவிக்கப்பட்டதோடு பொங்கல் கிரியைகள் சிறப்புற இடம்பெற்றுவருகிறது.

அந்தவகையில் 06.05.2019 அன்று பாக்குத்தெண்டல் உற்சவம் சிறப்புற இடம்பெற்றது அதனை தொடர்ந்து 13/05/2019 இன்று மாலை 03:00 க்கு காட்டாவிநாயகர் ஆலயத்தில் இருந்து தீர்த்தம் எடுக்கும் புனித நிகழ்விற்காக தீர்த்தக்குடம் புறப்பட்டு மாலை 06:00 க்கு புனித தீர்த்தக்கரை கடலில் அன்னைக்கு உப்பு நீரில் விளக்கெரிக்கும் தீர்தமெடுக்கப்பட்டது.



இதனை தொடர்ந்து 13/05/2019- இரவு 11:00 காட்டா விநாயகர் ஆலயத்தை தீர்த்தம் வந்தடைது 13/05/2019- நள்ளிரவு 12:00 அம்மன் சந்நிதானத்தில் மடை பரப்பி உப்பு நீரில் விளக்கெரித்தல் இடம்பெறும் அதனை தொடர்ந்து 15/05/2019- புதன் மடை 17/05/2019- வெள்ளி மடை 19/05/2019 – காட்டாவிநாயகர் ஆலய பொங்கல் உற்சவம் இடம்பெற்று 20/05/2019- அதிகாலை 03:00 மடை பண்டம் அம்மன் ஆலயம் எடுத்து செல்லப்பட்டு 20/05/2019 வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் இடம்பெற்று 20/05/2019- நள்ளிரவு 12:00 பொங்கல் இடம்பெறும் 25/05/2019- பக்தஞானி பொங்கல் ( பொங்கல் கிரியை நிறைவு) உடன் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் நிறைவடைய உள்ளது.



ஆலய பொங்கல் உற்சவத்துக்காக பின்வரும் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன


1. முப்படையினரின் மூவளைய பாதுகாப்பு, 2. பொலிஸாரின் முழுமையான உடல்,உடைமை சோதனை, 3. பிரதான வீதியுடன் மட்டுப்படுத்தப்பட்ட வாகன வசதிகள். ( ஆலய வளவினுள் எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை)

4. வியாபார நிலையங்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி, 5. பறவை காவடிகளுக்கான அனுமதி பாதுகாப்பு தரப்பினரால் வழங்கப்பட வில்லை (எனவே பறவை காவடி நேர்த்திக்கடன்களை அடுத்த வருடம் வழமை போல் நிறைவேற்ற முடியும்)


6. தேவையற்ற பொதிகளுடன் ஆலய வளவிற்குள் பிரவேசிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்,  7. கட்டாயமாக தங்களது தேசிய ஆள் அடையாள அட்டையை எடுத்து வாருங்கள், 8. ஆலய வளவிற்குள் பாதுகாப்பு சோதனைகள் எதுவும் கிடையாது, 9. முழுமையான பாதுகாப்பு தரப்பினரின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் என வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.