வவுனியா பொது நூலகத்திற்கு யாழ்.இந்திய துணைத் தூதரகத்தினால் நூல்கள் வழங்கி வைப்பு!!

2


நூல்கள் வழங்கி வைப்பு


வவுனியா பொது நூலகத்திற்கு யாழ்.இந்திய துணைத் தூதரகத்தினால் 70 நூல்கள் அடங்கிய தொகுதியொன்று இன்றையதினம் (16.05.2019) காலை 12 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டன.இந்தியாவை அறிவோம் எனும் திட்டத்தின் கீழ் 51 நூல்கள் அடங்கிய தொகுதியொன்றையும் யாழ். இந்தியத் துணைத்தூதகரத்தின் சார்பில் 16 நூல்கள் அடங்கிய தொகுதியொன்றினையும் சேர்த்து மொத்தமாக 70 நூல்கள் அடங்கிய தொகுதியினை வவுனியா பொது நூலகத்தில் வைத்து யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவர் பாலச்சந்திரன் வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் அவர்களிடம் கையளித்தார்.


அதன் பின்னர் வவுனியா பொது நூலகத்தினையும் பார்வையிட்டார். இந் நிகழ்வில் வவுனியா பொது நூலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், வாசகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


இவ்வாறான 70 நூல்கள் அடங்கிய தொகுதி முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட நூலகங்களுக்கு இன்றையதினம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவர் பாலச்சந்திரன் அவர்களினால் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.