ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருடன் ஏற்றப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான ஈகைச்சுடர்!!

329

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் 10வது ஆண்டு நினைவேந்தல் தற்போது தமிழர் தாயக்கத்தில் அனுஸ்டிக்கப்படுகின்ற நிலையில் சற்று முன்னர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.

இறுதி யுத்த நேரத்தில் தனது தாயாரை இழந்து நிர்க்கதியாக இருக்கும் சிறுமி ஒருவர் பிரதான ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தார்.

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் ஒன்று திரண்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

மதத் தலைவர்கள் பலரின் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து அங்குள்ள மதகுருமார்கள் உயரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மலரஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பிரதான ஈகைச் சுடர் ஏற்றிவைக்கப்ட்டதன் பின்னர் அங்கு அணித்திரண்டுள்ள பொதுமக்களால் சுடர்கள் ஏற்றப்படுகின்றன. தொடர்ந்து திருகோணமலை ஆதீனத்தின் தலைவரால் மே 18 ஆம் நாள் பிரகடணம் வாசிக்கப்பட்டது.