நாடுகடத்தப்படும் ஆபத்தில் இலங்கை தமிழ்க் குடும்பம்!!

274

அவுஸ்திரேலியாவில் நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தினருக்கு ஆதரவாக தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், போராட்டத்தை நடத்திவரும் ஆதரவாளர்கள் லிபரல் கூட்டணி ஆட்சிபீடமேறினாலும் தங்களது முயற்சியில் தாங்கள் சோர்ந்துவிடவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

பிரதமர் Scott Morrison, உள்துறை அமைச்சர் Peter Dutton உட்பட அரசின் முக்கியஸ்தர்கள் அனைவருக்கும் நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தினரின் நாடுகடத்தலை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

நாங்கள் வாக்களித்துள்ள அரசியல்வாதிகள் எங்களது குரலுக்கு செவிசாய்க்கவேண்டும்” என நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தினருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை தூதரக உயர்மட்ட அதிகாரி லால் ராஜ் விக்ரமதுங்க கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை நடேசலிங்கம்-பிரியா தம்பதியினர் இலங்கைக்கு திரும்பிச்செல்வதில் எந்தப்பிரச்சினையும் இல்லை.

அவர்கள் மாத்திரமல்ல வெளிநாடுகளிலுள்ள சகல இலங்கை மக்களும் அவர்களது சொந்தநாட்டுக்கு திரும்பி வரலாம் என்பதுதான் இலங்கை அரசின் தொடர்ச்சியான கோரிக்கையும் நிலைப்பாடாகும்” என தெரிவித்துள்ளார்.