கனேடிய கிரிக்கெட் அணிக்காக சாதனை படைத்த இலங்கை தமிழ் இளைஞன்!!

597

சாதனை படைத்த  தமிழ் இளைஞன்

ஈழத் தமிழ் மக்களுக்கான பெருமையின் அடையாளமாக இன்றைய இளம் சமூகத்தினர் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டி வருகிறார்கள். உலகில் வளர்ந்த நாடுகளில் உள்ள இளையோர்களோடு, பெரும் போட்டிக்கும் மத்தியில் தங்களின் தனித் திறமைகளை அடையாளப்படுத்தி, தங்களின் தாய்த் தேசத்திற்கும் இனத்திற்கும் பெருமை சேர்க்கிறார்கள்.

இந்நிலையில் கனேடிய இளையோர் கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் சாதனை படைத்துள்ளார். கனேடிய 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரனாக காவியன் நரேஸ் விளங்குகிறார். கடந்த 21ம் திகதி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற்ற ரி-ருவென்டி கிரிக்கெட் போட்டியில் சிறந்த பெறுபேறுகளை காவியன் நரேஸ் வெளிப்படுத்தியுள்ளார்.

இதில் 4 ஓவர்கள் பந்து வீசி 35 ஓட்டங்களை கொடுத்து இந்த 5 விக்கட்டுக்களை காவியன் நரேஸ் வீழ்த்தியுள்ளார். உள்ளூர் போட்டியொன்றில் விளையாடி 5 விக்கட்டுக்களை அதிகுறைந்த ஓட்டங்களுக்குள் வீழ்த்திய முதல் வீரர் எனும் சாதனையை அவர் நிலை நாட்டியுள்ளார்.

West Indies Marry boys sports clubக்காக prison sports club உடனான TTCB national League 2019 premiership போட்டியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதேவேளை நியூசிலாந்தில் நடை பெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 63 ஓட்டங்களை குவித்து தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.