ஆண் நண்பரை சந்திக்க அமெரிக்காவுக்கு சென்ற பிரித்தானிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!!

308


இளம்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்



தனது ஆண் நண்பரை சந்திக்கச் சென்ற பிரித்தானிய இளம்பெண் ஒருவர், கைது செய்யப்பட்டு மூன்று நாட்கள் காவலில் அடைக்கப்பட்டு மோசமாக நடத்தப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் நடந்தேறியுள்ளது.



எஸ்ஸெக்சை சேர்ந்த Sophie Frampton (30), தனது ஆண் நண்பரை சந்திப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தபோது, கைவிலங்கிடப்பட்டு, உடை களையப்பட்டு சோதிக்கப்பட்டதாகவும், தான் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மருந்துகளை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படாமல், மின்சாரம் பாய்ச்சப்பட்டு கொல்லப்படப்போவதாக மிரட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.




Sophie நான்காவது முறையாக தனது நண்பரை காணச்சென்றிருந்தாலும், தான் Estaவுக்கு விண்ணப்பித்தபோது வேறு முகவரியை கொடுத்ததாகவும் ஒப்புக் கொண்டார்.Estaவுக்கு ஒரு முறை விண்ணப்பித்தால் போதும் என Sophie தவறாக புரிந்து கொண்டதால் பிரச்சினை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Esta என்பது விசா இன்றி அமெரிக்காவில் 90 நட்கள் தங்குவதற்கான ஒரு ஏற்பாடாகும். இந்த பிரச்சினை காரணமாக Sophieயை கைது செய்த அமெரிக்க பொலிசார், அவரை கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றதாகவும், அவர் அடைக்கப்பட்டிருந்த அறையில் இருந்த கழிவறை பயன்படுத்தப்பட முடியாத நிலைமையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.