குடிபோதையில் குழந்தையின் மீது படுத்து உறங்கிய தாய் : இரத்தம் கக்கி உயிரிழந்த குழந்தை!!

336


இரத்தம் கக்கி உயிரிழந்த குழந்தை



பிறந்து நான்கு வாரங்களே ஆன குழந்தை ஒன்றை இரவு விடுதிக்கு அழைத்துச் சென்றதோடு, குடிபோதையில் அந்த குழந்தையின் மீதே படுத்து உறங்கிய ஒரு தாய்க்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



Marina Tilby (26) தனது மகன் Darianஐ வேல்ஸிலுள்ள ஒரு இரவு விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அளவுக்கு மீறி குடித்தபின் இரவு விடுதியில் தான் சந்தித்த இரண்டு ஆண்களை அழைத்துக் கொண்டு தனது கேரவனுக்கு திரும்பியுள்ளார் Marina. அதே கேரவனின் இன்னொரு பகுதியில் Marinaவின் சகோதரியும் இருந்துள்ளார்.




அதிகாலையில் Marina படுத்திருந்த அவரது படுக்கையறைக்கு அவரது சகோதரி வந்து பார்த்தபோது, குடிபோதையில் Darian மீதே Marina படுத்திருப்பதைக் கண்டு அவரை எழுப்பியிருக்கிறார். ஆனால் அளவுக்கதிகமான போதையில் இருந்ததால் Marinaவை எழுப்ப முடியாததால் குழந்தையை இழுத்து எடுத்திருக்கிறார் அவரது சகோதரி.


அப்போது குழந்தையின் வாயிலிருந்து இரத்தம் வடிவதைக் கண்டு, உடனடியாக மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றிருக்கிறார் அவர். ஆனால் குழந்தை மாரடைப்பு காரணமாக இறந்து விட்டிருக்கிறது. Marinaவைக் கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர்.

விசாரணைக்குப்பின், மருத்துவ அறிக்கையால் குழந்தையின் மரணத்துக்கு Marina அதன் மீது படுத்ததுதான் காரணம் என்பதை நிரூபிக்க இயலாததால், கொலைக்குற்றம் சாட்டப்படாமல், குழந்தையை கவனிக்காமல் அலட்சியமாக இருந்ததாக மட்டும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே Marinaவுக்கு இரண்டு ஆண்டுகள், நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


தீர்ப்பு விவரத்தை வாசித்த நீதிபதி, Marina ஒரு தாயாக தனது கடமையை செய்யத் தவறி விட்டதாகவும், குழந்தையின் மீதே படுத்துக் கொள்ளும் அளவுக்கு குடித்திருந்ததாகவும், அவன் வாயிலிருந்து இரத்தம் வடிந்ததைக் கூட கவனிக்க முடியாத அளவுக்கு போதையிலிருந்ததாகவும், சரியான நேரத்திற்கு அதை கவனித்திருந்தால் குழந்தையை ஒரு வேளை காப்பாற்றியிருந்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

நடந்த தவறுக்காக குழந்தையின் தந்தையிடமும், நீதிமன்றத்திடமும், தனது சொந்தக் குடும்பத்திடமும் வருத்தம் தெரிவித்துக் கொண்டுள்ள Marina, தனது தவறால் தான் இழந்த தனது குழந்தையின் இழப்பு தனது வாழ்நாள் முழுவதும் தன்னை வருத்தப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.