வவுனியா வடக்கின் 55 காணிப்பிணக்குகளுக்கு விரைவில் தீர்வு!!

291

காணிப்பிணக்குகள்

வவுனியா வடக்கு காணிப்பிணக்குகள் தொடர்பான 55 முறைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், 25 புதிய முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவற்றுக்கு விரைவில் தீர்வு கணப்படும் எனவும் வவுனியா விசேட காணி மத்தியஸ்தர் சபை தவிசாளர் இ.நவரட்ணம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா, வவுனியா வடக்கு பகுதியில் உள்ள காணி உரிமம் மற்றும் உரிமை, காணி ஆவணம், காணி எல்லைப் பிரச்சளை உள்ளிட்ட காணி தொடர்பான பிணக்குகளை தீர்த்து வைக்கும் முகமாக 55 முறைப்பாடுகள் கடந்த சனிக்கிழமை கலந்துரையாடப்பட்டுள்ளது.

சன்னாசிபரந்தன், குறிசுட்டகுளம் ஆகிய பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் அதிகமானவை வனவள திணைக்களத்திற்கு எதிரானவையாகும். குறித்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள வவுனியா வடக்கு வனவள திணைக்கள அதிகாரிகள், வவுனியா வடக்கு காணி உத்தியோகத்தர் ஆகியோர் பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். இவற்றுக்கு விரைவில் தீர்வு காணப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கில் முதன் முதலாக இடம்பெற்ற காணி மத்தியஸ்தர் சபை அமர்வை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன், உதவிப் பிரதேச செயலாளர் த.தர்மேந்திரா, வனவள அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதுதவிர, காணிப்பிணக்குகள் தொடர்பாக வவுனியா வடக்கின் அடுத்த அமர்வு எதிர்வரும் ஜீலை 13 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறும்.

அப்பகுதியைச் சேர்ந்தோர் புதிதாக முறைப்பாடுகள் எதுவும் செய்யில் அன்றைய தினம் காலை 9 மணியில் இருந்து 1 மணிவரை வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் விசேட காணி மத்தியஸ்தர் சபையிடம் மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.