அன்று கர்ப்பிணியாக சாலையில் வசித்த லண்டன் பெண் : இன்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ஆச்சரியம்!!

361

சாலையில் வசித்த லண்டன் பெண்

லண்டனில் இளம்பெண்ணொருவர் கர்ப்பமானதால் வீட்டை விட்டு வெளியில் துரத்தப்பட்ட நிலையில் தற்போது தொழிலதிபராகி கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். லண்டனை சேர்ந்த யேமி பென் (24) என்ற இளம்பெண் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணத்துக்கு முன்னரே கர்ப்பமானார். இதையடுத்து அவரின் தாய் மற்றும் குடும்பத்தார் அவரை வீட்டிலிருந்து வெளியில் துரத்தினார்கள். பின்னர் ஒரு மாதத்துக்கு மேலாக சாலையில் அவர் வசித்தார்.

யேமி கூறுகையில், வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டு சாலையில் வசித்த நாட்கள் கொடுமையானவை என கூறுகிறார். யேமியின் காதலரும் அவரை கைவிட்ட நிலையில் நபர் ஒருவரின் நட்பு யேமிக்கு கிடைத்தது. இந்த சமயத்தில் தான் லீ என்ற பெண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார்.

பின்னர் நட்பான நபருடன் அவருக்கு காதல் ஏற்பட்ட நிலையில் அவரையே யேமி திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து லண்டனில் இனி வாழவேண்டாம் என நினைத்து அவுஸ்திரேலியாவுக்கு சென்றார். அங்கு பொறியியல் பட்டதாரியா யேமி ஆலோசனை நிறுவனத்தை தொடங்கினார்.

அவரின் திறமையால் ஆலோசனை நிறுவனம் பெரிய அளவில் வளர தொடங்கியது. தற்போது அந்த நிறுவனம் மூலம் அவருக்கு கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. பின்னர் தனது சொந்த ஊரான லண்டனுக்கு வந்த யேமி அங்கு ஜிம் எனப்படும் உடற்பயிற்சி கூடத்தை தொடங்கினார்.

அந்த தொழிலிலும் தனது திறமையை வெளிப்படுத்த தொடங்கிய நிலையில் அவருக்கு பணம் குவிய தொடங்கியது. இரண்டு தொழிலிலும் சேர்ந்து யேமிக்கு வருடத்துக்கு £900,000 வருமானம் வருகிறது. தனது கணவருடன் அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்து அவனுக்கு ஐந்து வயதாகிறது.

யேமி கூறுகையில், தன்னம்பிக்கை தான் என்னை இந்தளவுக்கு கொண்டு வந்தது. எந்த தாய் என்னை வீட்டை விட்டு துரத்தினாரோ அவர் என்னை பார்த்து இன்று பெருமை கொள்கிறார். பயமில்லாமல் நம் இலக்கை நோக்கி பயணித்தால் வெற்றி நிச்சயம் என கூறியுள்ளார்.