விமான கழிவறையில் எழுதப்பட்ட ஒரு வாசகம் : தொழிலதிபரின் தலையெழுத்து மாறிப்போனது!!

345

கழிவறையில் எழுதப்பட்ட வாசகம்

2017 ஆம் ஆண்டு விமான கழிவறையில் எழுதி வைத்த ஒரு வாசகத்தால் மும்பை தொழிலதிபரின் தலையெழுத்து மாறிப்போனது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. பிர்ஜு சல்லா என்கிற தொழிலதிபர் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் திகதியன்று, மும்பை-டெல்லி நடுவே இயக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானம் 9w339ல் பயணித்துள்ளார்.

அந்த பயணத்தின்போது, விமானத்தை கடத்தப்போவதாக ஆங்கிலம் மற்றும் உருது ஆகிய மொழிகளில் எழுதி அந்த பேப்பரை பொருளாதார பிரிவில் உள்ள கழிவறையில் வைத்துள்ளார்.மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு விமானம் கடத்தப்படும் என்றும் அல்லா சிறந்தவர் எனவும் இவர் எழுதிவைத்துள்ளார். இந்த வாசகத்தால் விமானம் அவசரமாக அகமதாபாத்தில் தரையிறக்கப்பட்டு விசாரணை நடத்தியதில், இது சல்லாவின் விளையாட்டு என தெரியவந்து அவர் கைது செய்யப்பட்டார்.

டெல்லியில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் தனது காதலி பணியாற்றி வருவதாகவும், இப்படி ஒரு மிரட்டல் விடுத்தால் டெல்லி விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு, காதலி, மும்பை அலுவலகத்திற்கே வருவார் என்ற ஆசையில் இப்படி ஒரு விபரீதமான செயலை செய்துள்ளார் என அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கு விசாணை நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளியான பிர்ஜு சல்லாவுக்கு 5 கோடி அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அபராதத் தொகை குறித்த விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும், ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த ஒரு விமானத்திலும் பறக்க முடியாது என்ற பட்டியலில் பிர்ஜு சல்லா கொண்டு வரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.