வவுனியாவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் விஜயம்!!

424


அத்துரலிய ரத்ன தேரர்



பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்னதேரர் வவுனியாவிற்கு விஜயம் செய்து இங்குள்ள சில பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் எனப் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.



வவுனியா, தவசிகுளம் சேவாலங்கா கேட்போர் கூடத்தில் இன்று இச்சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்னதேரர், இலங்கை ஒரு நாடு. இங்கு எல்லோருக்கும் ஒரே சட்டம் தான். முஸ்லிம் மக்களுக்கு என தனியான பகுதியோ, சட்டமோ இல்லை. இந்த நாட்டில் இனவாதம், மதவாதம், அடிப்படைவாதம் என்பன ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு இணைந்து பணியாற்ற அனைவரும் முன்வர வேண்டும்.




நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையைத் தொடர்ந்து எதிர்காலத்தில் எவ்வாறு தமிழ் – சிங்கள- முஸ்லிம் மக்கள் இணைந்து செயற்படுவது என்பது குறித்தும், எதிர்காலத்தில் நாட்டை அபிவிருத்தி நோக்கி நகர்த்துவதற்கும் ஏற்ற வகையில் குழுவாக இணைந்து செயற்படும் நோக்கிலும் வடக்கிற்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளேன். எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவோம் என இதன்போது தெரிவித்தார். இதன்போது தற்போதைய நிலமைகள் மற்றும் வவுனியாவின் இன ரீதியான நிலமைகள் தொடர்பில் பலரும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.