திருமணமான பெண்ணை எரித்து கொலை செய்தது ஏன்? காவலரின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

307


செளமியா



தமிழகத்தில் செளமியா என்ற பெண்ணை எரித்து கொலை செய்த சம்பவத்தில் கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளான். கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரை அருகே உள்ள வள்ளிக்குந்நு காவல் நிலையத்தில் சிவில் பொலிஸ் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் சௌமியா.



இவரை சமீபத்தில் ஆலுவா டிராபிக் காவலர் அஜாஸ் என்பவர் காரால் இடித்து, அரிவாளால் வெட்டி, அதன் பின் பெட்ரோல் ஊற்றி அவரை கொலை செய்தார். செளமியாவை பெட்ரோல் ஊற்றி எரித்த பின்பு, தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார்.




ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நடந்தாலும், அங்கிருந்த சிலர் இதைக் கண்டு அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அஜாஸ் 50 சதவிகிதம் தீக்காயங்களுடன் ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.


இதற்கிடையில் செளமியாவுக்கும் அஜாஸுக்கும் காவலர் பயிற்சி காலத்திலேயே நட்பு இருந்ததாகவும். அஜாஸ் கடனாகக் கொடுத்த ஒன்றே கால் லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுத்தபோது அதைப் பெறாமல் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கூறியதாகவும் செளமியாவின் தாய் இந்திரா தெரிவித்தார்.

இந்நிலையில் மருத்துவமனையில் இருக்கும் அஜாஸ் மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலத்தில், செளமியா என்னைத் திருமணம் செய்யாமல் உதாசீனப்படுத்தியதால் பெட்ரோல் உற்றி எரித்துக் கொலை செய்தேன். பின்னர் என் உடலிலும் பெட்ரோல் ஊற்றி தீவைத்தேன். இதற்காக வாடகை கார் எடுத்துக்கொண்டு வந்தேன் என்று கூறியுள்ளார். உயிரிழந்த செளமியாவிற்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இவரின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.