அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் : ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!!

303

விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

ஈரான் மிகப்பெரிய தவறை செய்து விட்டது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது உத்தியோனப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா நிறுத்தியது. இதனால் இருநாடுகளுக்கும் இடையில் அண்மை காலமாக மோதல் போக்கு வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில், ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. எனினும், ஈரானும் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு தகுந்த திலடி கொடுத்து வருகிறது.

இவ்வாறான பின்னணியில் ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இரு நாடுகளும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. இதற்கிடையே, ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் என்ற பிராந்தியத்திற்குள் வந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, உளவு விமானம் சர்வதேச எல்லையில்தான் பறந்தது. அதை வேண்டுமேன்றே ஈரான் அரசு சுட்டு விழ்த்தியது என குற்றம்சாட்டியது. இந்நிலையிலேயே, ஈரானை எச்சரிக்கும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரான் மிகப் பெரிய தவறு செய்து விட்டது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.