வவுனியா நகரசபை மைதானத்தில் இன்னிசை நிகழ்வுகள்!!

14


இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தையடுத்து அச்சம்பவத்திலிருந்து மக்களை மீண்டு பழைய நிலைக்குத் திரும்பவும் இனங்களுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட பிரிவினையை முற்றாக மாற்றிக்கொள்ளும் நோக்கிலும் வவுனியா வாழ் மக்களை மனதளவில் மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கிலும்


இலங்கை இராணுவத்தின் 56வது படைப்பிரிவின் எற்பாட்டில் அக்கினி இசைக்குழுவின் இன்னிசை இரவு நிகழ்வு ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை 06.07.2019 மாலை 7மணியளவில் நகரசபை திறந்த மைதானத்தில் வர்த்தகர் சங்கம், வவுனியா முஸ்லிம் பள்ளிவாசல்களுடன் இணைந்து நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தென்பகுதியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள அக்கினி இசைக்குழுவின் இன்னிசை விருந்தை வழங்கவுள்ளனர்.

நகரசபை திறந்த மைதானத்தில் இலவசமாக இடம்பெறவுள்ள இன்னிசை நிகழ்வு தமிழ், முஸ்லிம், சிங்கள ஆகிய இனங்களுக்கிடையே ஒற்றுமையையும் மீண்டும் தமது வாழ்க்கை முறைக்குத் திரும்ப இன்னிசை நிகழ்ச்சி உதவும் என்று படையினர் தெரிவிக்கின்றனர்.