23 வருடங்கள் வயிற்று வலியால் துடித்த பெண் : மருத்துவ அறிக்கையில் மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

293

ரஷ்யாவில் 23 வருடங்கள் பெண் ஒருவர் வயிற்றில் கத்திரிக்கோலை சுமந்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த எலீட்டா கோபீவாவுக்கு 1996 ஆம் ஆண்டு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதிலிருந்து அவ்வப்போது அவருக்கு அடிவயிற்றில் ஏற்பட்டது. வலி வரும்போதெல்லாம் எலீட்டா மருத்துவர்களிடம் செல்வார். அதற்கு மருத்துவர்கள் தற்காலிக நிவரணி ஒன்றை வழங்குவர்.
இப்படி 23வருடங்களாக அவர் தொடர்ந்து இதை சந்தித்து வந்துள்ளனார்.

இந்நிலையில் ஒரு மருத்துவர் அவருக்கு ஈரலில் நோய் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு அடிக்கடி வயிற்றுவலி வந்திருக்கலாம் என்ற நோக்கிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இப்படி தொடர் வாடிக்கையாக நடந்து வந்த சூழலில், இறுதியாக ஒரு மருத்துவர் வயிற்றுப் பகுதியை எக்ஸ்ரே எடுக்குமாறு பரிந்துரைத்தார்.

எலீட்டாவுக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்த சிறப்பு மருத்துவருக்கு தன் கண்களையே நம்ப இயலவில்லை. எலீட்டாவின் வயிற்றுக்குள் கத்தரிகோல் ஒன்று இருந்தது. எக்ஸ்ரே எடுக்கும் அறைக்குள் எலீட்டா கத்தரிகோலை தவறுதலாக எடுத்துச் சென்றிருக்கூடும் என்று நினைத்தார்.

ஆனால், உண்மையில் வயிற்றினுள்ளேதான் கத்தரி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வயிற்றினுள் கத்தரிகோல் எப்படி வந்திருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கேட்டபோது எலீட்டாவுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

தனக்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று கூறினார். அப்போது அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கத்தரியை மறந்துபோய் எலீட்டாவின் வயிற்றுக்குள் வைத்துவிட்டது தெரிய வந்தது. 23 ஆண்டுகள் தேவையில்லாமல் வேதனைப்பட்டதற்கு எலீட்டாவுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் சம்மந்தபட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.