தாலி கட்டும் நேரத்தில் திடீரென மயங்கி விழுந்த மணப்பெண் : அதிர்ச்சியடைந்த உறவினர்கள்!!

636

அதிர்ச்சியடைந்த உறவினர்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தாலி கட்டும் நேரத்தில் திடீரென மணப்பெண் மயங்கி விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமாரி மாவட்டத்தில் இடைக்கோடு பகுதியை சேர்ந்த ஒரு இளைஞனுக்கும், பாகோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

நேற்று காலை பாகோடு பகுதியிலுள்ள ஆலயத்தில் திருமணம் நடக்கவிருந்ததால், இரு வீட்டாரின் உறவினர்களும் மகிழ்ச்சியாக வருகை தந்தனர். திருமணத்திற்கான வழிபாடு துவங்கி விமரிசையாக சென்றுகொண்டிருந்தது. ஆலயத்தில் இருந்த போதகர் திருமணத்திற்கான வாக்குறுதிகளை வாசித்தார்.

அந்த வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய மணப்பெண் திடீரென மயக்கம் போட்டு தரையில் விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக மணப்பெண்ணை மீட்டு ஆலயத்தின் உள்பகுதியில் உள்ள அறைக்கு கொண்டு சென்றனர்.

தகவலறிந்து வந்த மருத்துவர் மணப்பெண்ணை பரிசோதித்துவிட்டு, ஒன்றும் இல்லை திருமணத்தை தொடர்ந்து நடத்தலாம் எனக்கூறியுள்ளார். உடனே அந்த மணப்பெண் மருத்துவரின் கையை பிடித்துக்கொண்டு, இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை எனக்கூறியுள்ளார்.

இதனை கேள்விப்பட்ட மணமகன், மணப்பெண்ணிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் மணப்பெண் தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருந்ததால், போதகர் திருமணத்தை நிறுத்தினார். இதனால் இரு வீட்டாருக்கு இடையில் கலகலப்பு ஏற்பட ஆரம்பித்தது. அப்போது பிரச்னை செய்யாமல் கலைந்து செல்லுமாறு போதகர் கடும் எச்சரிக்கை விடுத்ததால், அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.