வவுனியாவில் மனோ கணேசனின் இணைப்புக் காரியாலயம் திறந்துவைக்கப்பட்டு மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும்!!

327

வவுனியாவில் அமைச்சர் மனோ கணேசனின் இணைப்புக் காரியாலயம் ஒன்று மிக விரைவில் திறந்து வைக்கப்பட்டு அதனூடாக மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய ஒருமைப்பாடு அரச கருமமொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசனின் வடமாகாண இணைப்பாளர் ச.விமலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை வன்னி இன் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்,

வன்னி மாவட்ட அபிவிருத்திக்காக அமைச்சர் மனோ கணேசன் முன்னூறு மில்லியன் ரூபாவை ஒதுக்கீடாக வழங்கியுள்ளார். இந்நிதியூடாக பாடசாலைகள், விளையாட்டுக்கழகங்கள், திருத்தி உட்கட்டமைப்பு வசதிகள் மேலும் பல வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியும். சமூக மேம்பாட்டு அமைச்சின்னூடாக பரந்துபட்ட வித்தில் எல்லாவிதமான வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ள முடியும். வவுனியா மாவட்டத்திற்காக நூறு மில்லியன் ரூபா முதற்கட்டமாக நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமூக மேம்பாட்டு அமைச்சினூடாக இந்த வேலைத்திட்டங்களை மேற்கொள்ள இருக்கின்றது, இதன் முதற்கட்டமாக பதினொரு மில்லியன் ரூபாவிற்கான வேலைத்திட்டங்கள் நாளைய தினத்தில் வவுனியா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்டவுள்ளது.

இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட வவுனியா பிரதேச செயலகத்தினூடாக இந்த நிதி சென்று செல்லக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சர் மனோ கணேசன் அமைச்சராக இருகின்ற இக்காலத்தில் வன்னி மாவட்டத்திற்கான அபிவிருத்தி போதாமை இருக்கின்றது. கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் வவுனியா மாவட்டங்களைத்தாண்டி வேறு மாவட்டங்களுக்கு வழங்கியிருந்தபோதிலும் நேரடியாக வவுனியா முல்லைத்தீவு, மன்னார் போன்ற வன்னி மாவட்டங்களுக்கு சென்று நேரடியாக நிலைமைகளைப் பார்வையிட்டதன் மூலமாக வன்னி மாவட்டத்தின் இந்த மூன்று மாவட்டத்தின் அபிவிருத்தியில் உரியளவில் இடம்பெறவில்லை என்பதை நேரடியாக இனங்கண்டு கொண்டதன் மூலமாக இந்த நிதி ஒதுக்கீடுகளை அமைச்சர் வழங்கியுள்ளார். தேவைப்படின் மேலும் நிதி ஒதுக்கீட்டினை வழங்கவுள்ளார்.

வாழ்வாதார உதவி என்பது இன்னுமொரு நிதி ஒதுக்கீட்டிலிருந்து செயற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருவதால் வன்னி மாவட்ட மக்களை மேலும் மேம்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதனூடாக இவ்வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

வவுனியா மாட்டத்தில் வேலைத்திட்டங்களை அமைச்சரின் வவுனியா இணைப்பாளர் எம்.பி.நட்ராஜ் ஊடாக நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். நேரடியாகவும் மக்கள் எம்முடன் தொடர்புகொண்டு இன்னுமதிகமான வேலைத்திட்டங்களையும் ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

அபிவிருத்தியுடன் நாங்கள் நின்றுவிடாது மிக விரைவில் இமைச்சரின் இணைப்புக் காரியலாயம் ஒன்றினை வவுனியாவில் திறந்துவைத்து அதனூடாகவும் மக்கள் பிரச்சினைகளை நேரடியாக தீர்த்துவைப்பதற்கான சகல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றோம் என்று மேலும் தெரிவித்துள்ளார்.