வெளிநாட்டில் மாட்டி கொண்ட மகன்கள் : தனியாளாக அவர்களை மீட்ட வீரத்தாய்!!

497


வீரத்தாய்



வெளிநாட்டு வேலைக்காக சென்று பல்வேறு கொடு மைகளை அனுபவித்த தனது மகன்களை பல போரா ட்டங்களுக்கு பின்னர் தனியொருத்தியாக மீட்டுள்ளார் ஒரு தாய். தமிழகத்தின் திருப்பூரை சேர்ந்தவர் மாரியம்மாள். கணவரை பிரிந்து வாழும் இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.



இந்நிலையில் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பிவைக்கும் ரஞ்சித் என்ற ஏஜெண்ட் மாரியம்மாளின் மகன்கள் மணிகண்டன், மணித்துரை இருவருக்கு தாய்லாந்தில் கார்மென்ட் நிறுவனத்தில் 40 ஆயிரம் சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து மாரியம்மாள் அவரிடம் ரூபாய் 2,70,000 கட்டிய நிலையில் கடந்த ஜனவரி 21ஆம் திகதி மணிகண்டனும், மணித்துரையும் தாய்லாந்துக்கு சென்று ஹொட்டலில் தங்கவைக்கப்பட்டனர்.




பின்னர் அவர்களை தமிழர் ஒருவரின் உணவகத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டுள்ளனர் அங்குள்ள ஏஜெண்டுகள். அப்போதுதான், அவர்கள் அழைத்துவரப்பட்டது டூரிஸ்ட் விசா என்றும், அது முடிந்தவுடன் உணவகத்தில் ஏமாற்றிச் சேர்த்துவிட்டுச் சென்றனர் என்றும் தெரியவந்துள்ளது. பின்னர் அந்த உணவக உரிமையாளர், அவர்களுக்கு முடிந்தவரை அடைக்கலம் தருவதாகவும் அதற்குள் இந்தியாவில் யாரிடமாவது உதவி கேட்டுச் சென்றுவிடுமாறும் கூறியுள்ளார்.


இது குறித்து தகவலறிந்த மாரியம்மாள், ரஞ்சித் குறித்து பொலிசில் புகாரளித்தார். ஆனால் சரியான நடவடிக்கை இல்லாததால் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்தது தெரிந்து, ரஞ்சித் உஷாராகி தாய்லாந்துக்குத் தகவல் கொடுத்து, ஏஜென்ட்டுகள் மூலம் மாரியம்மாளின் இளைய மகன் மணிகண்டனை மட்டும் பாங்காக் அழைத்து வந்துள்ளார்.

ஆனால் மேலும் பணம் கொடுத்தால் தான் பையனை விடுவோம் என்று கூறி அங்குள்ள ஹொட்டலில் அவரை விட்டுச் சென்றுவிட்டனர். அங்கிருந்த பரம்ஜித் சிங் என்பவர், அந்தப் பையனுக்கு அடைக்கலம் கொடுத்து வீட்டுக்குத் தகவல் கூறியுள்ளார். அவருக்கு டிக்கெட்டுக்கான பணம் அனுப்பி, அவரின் உதவியால் மகன் மணிகண்டனை ஜூன் 13 அன்று இந்தியா வரவழைத்துள்ளார் மாரியம்மாள்.


இன்னொரு மகன் மணித்துரையை அழைத்துவர கலெக்டரிடம் மனு கொடுத்துப் பார்த்தார். பதில் ஏதும் இல்லாமல்போகவே, இந்தியத் தூதரகத்தின் உதவியை நாடினார், மாரியம்மாள். இதையடுத்து இந்திய அதிகாரிகள், மணித்துரையை பாங்காக் இந்தியத் தூதரகத்தில் சரணடையக் கூறியுள்ளனர். மாரியம்மாளிடமும் அரசு அதிகாரிகள் விவரங்களைச் சேகரித்து மேலிடத்துக்கு அனுப்பி மகனை மீட்டுத்தருவதாகக் கூறியுள்ளனர்.

ஆனால், தூதரகத்து அதிகாரிகள் அவரை 15 நாள்கள் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். இந்திய அதிகாரிகளும் மேலதிக நடவடிக்கைகள் எடுக்காமல் விடவே, மீண்டும் பரம்ஜித் சிங்கிடம் உதவி கேட்டு அவருக்கு மீண்டும் பணம் அனுப்பி மணித்துரை இந்தியாவுக்கு வரவழைத்துள்ளார். மாரியம்மாள் கூறுகையில், என் மகன்களை இந்தியா கொண்டு வர அதிகம் போராடினேன். எனக்கு இந்திய அரசு அதிகாரிகளும், பொலிசாரும் எந்த உதவியும் செய்யவில்லை என்று ஆதங்கத்துடன் பேசினார்.